Home பாலியல் செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்

செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்

37

helthகணவன் மனைவி தாம்பத்தியத்தில் தொடர்ந்து மன மகிழ்வுடன் செயல்பட தம்பதியர்கள் இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம், அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், ஒமேகா கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒமேகா கொழுப்பு வகைகள் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை (நட்ஸ்) வகைகளில் கிடைக்கும், இதனால் செக்ஸ் சக்தி அதிகரிக்கும். எந்த நிலையிலும் செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி டாக்டர்கள் கூறும் மருந்துகளையோ, பூஸ்டர்கள் என்று சொல்லும் பவுடர்களையோ சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட முடித்ததும் உடனே உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. வயிற்றில் உணவு செரிக்காமல் இருந்தால் செக்ஸ் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது எனவே முழுமையான இன்பம் கிடைக்காது.

அவசர கோலத்தில் செக்ஸ் உறவு கொள்ள கூடாது, இதை ஒரு இசையை ரசிப்பது போல மென்மையாகவும், நிதானமாகவும் செயல் பட வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் செக்ஸ் உறவு அரைகுறையாக ஆகிவிடும். தம்பதியர்களிடையேயான கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. அதே சமயம் மனம் ஒற்றுமையான பின் உடலுறவு கொண்டால் நலமாக இருக்கும், கோபத்தில் உடலுறவு கொண்டால் ஆழ்ந்த மனபாதிப்புகள் உண்டாகி தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.

செக்ஸில் ஒரே மாதிரி செயல்பதும் இயந்திர தனங்கள் இனிமை தராது. கற்பனை சிறகை விரித்து வெவ்வேறு மாதிரியாக உடலுறவு கொண்டால் வாழ்க்கை இனிக்கும். அதே நேரத்தில் கண்ட கண்ட பலான சிடிக்களை பார்த்து அது போல முயற்சித்தால் கடும் பிரச்சினைகள் உண்டாகும். வயதான பின்போ குழந்தை வளர்ந்ததும் செக்ஸ் உறவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல. கணவன் மனைவி செக்ஸில் எதுவுமே தவறில்லை, இப்படி பேசினால் அநாகரிகம் என்றோ அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. மேலும் நாம் பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது.

இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான். செக்ஸ் உணர்ச்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும், பெண்களுக்கோ அடிக்கடி ஆசை எழாது, ஆண்கள் ஆசை எழுந்தாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும், இல்லையென்றால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படும், செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் பரவாயிலை, ஆனால் தினம் தினம் அதை பார்ப்பதும் அதன்படி உறவு கொள்ளவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். செக்ஸ் உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

அழுக்கு உடம்போடும், வியர்வை பிசுபிசுப்புடனும் உடல்உறவு கொள்ள கூடாது, உடல் உறவை மேற்கொள்ளும் முன் தம்பதியர் இருவரும் குளித்து செண்ட் அடித்து கொள்ளலாம். இருவரும் தூங்க ஆரம்பிக்கும் முன்பே உடலுறவு கொள்ள வேண்டும், வேலை முடிந்து நள்ளிரவில் வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நினைத்தால் மனைவி தயாராக இருக்க மாட்டார், இதை புரிந்து கொள்ள வேண்டும். அவசர உடலுறவு வேஸ்ட் ஆகும், தனிமையும் இடமும் கிடைப்பது தம்பதியர்களுக்கு அரிதாகிக்கொண்டிருந்தாலும் யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தினை நன்றாக அனுபவிக்க முடியும். கணவன் மனைவி இருவரும் முற்றிலும் தவிர்க்க வேண்டியது கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உடல்உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.