காம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’
செக்ஸ் பற்றிய அரிச்சுவடி புரிபட ஆரம்பித்த ஆதி நாளிலிருந்தே மனிதன், அது தொடர்பான மற் றொரு விஷயத்திலும் அதிக கவ னம் செலுத்த ஆரம்பித்தான். எப்படி ஆபாச புத்தகமும் படமும் செக்ஸ் உணர்வைத் தூண்டிவி டும் என்று நினைத்தானோ அதுபோல, செக்ஸ் சாமர்த்தியத்தைத் தூண்டிவிடும் அல்லது தாம்பத்ய உறவின் நேரத்தை
அதிகப்படுத்தும் ஒரு பொருளை மனிதன் தேடிக்கொண்டே இருந் தான். கவனிக்க – தன் செக்ஸ் பிரச் னையை மட்டும் தீர்த்துக்கொள் வதற்காக இதுபோன்ற பொ ருளை மனிதன் தேடவில்லை. ‘இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்’ என்ற அதீத ஆசையின் விளைவே இந்தத் தேடல்.
மனிதனின் காம உணர்வை அதிகப்படுத்தும் பொருட்களுக்கு ‘அப்ரோடிஸியாக்’ (Aphro disiac) என்று பெயர். இது மருந்தாக, வாசனைப் பொ ருளாக, உணவாக, உபகரண மாக எதுவாகவும் இருக்கலாம்.
செக்ஸ் உணர்வைத் தீவிரமாக த் தூண்டிவிடும் பொருட்களுக் கு ‘அப்ரோடிஸியாக்’ என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. கிரேக்க புராணத்தில் ‘யுரே னஸ்’ என்ற ஒரு கடவுள் இருந் தார். இவருக்கு ‘க்ரோனஸ்’ என் றொரு மகன். தந்தையும் மகனும் நேசபாவத்துடன் இருப்பதைக் கா ட்டிலும் சண்டையிட்டுக் கொள் வதுதான் அதிகம். அப்படி ஒருநா ள் இருவருக்கும் இடையே நடை பெற்ற சண்டையின் உச்சத்தில், க்ரோனஸ் தன் தந்தையின் பிறப் புறுப்பை அறுத்துக் கடலில் வீசி எறிந்தான். கடல் அலைகளில் மிதந்த பிறப்புறுப்பைச்சுற்றி நுரைகள் சூழ்ந்தன. அந்த நுரையிலிருந்து ‘அப் ரோடைட்’ என்கிற பெண் கடவுள் பிறந் தாள். ‘அப்ரோஸ்’ (Aphros) என்ற கிரே க்க வார்த்தைக்கு நுரை என்று பொரு ள். நுரையிலிருந்து பிறந்ததால், அவ ளுக்கு அப்ரோடைட் என்று பெயர் வந் தது. இவளின் வேலை கடவுள்களுக்கு ம், மனிதர்களுக்கும் செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டி விட்டுக்கொண்டே இரு ப்பதுதான்.
பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கும் வசீகரத்துடன் இருந்த அப்ரோ டைட்டை திருமணம் செய்துகொள்ள மற்ற கடவுளர்களுக்கு மத்தியில் ஏகப் பட்ட போட்டி. அப்ரோடைட்டின் தந்தை யான யுரேனஸ் அவளை ‘ஹிப்பாய் ஸ்டாஸ்’ என்பவனுக்குத் திருமணம் செய் து வைத்தார். ஹிப்பாய்ஸ்டாஸ்- தங்க ஆபரணங்கள் செய்பவர்க ளி ன் கடவுள். ஹிப்பாய்ஸ்டாஸை மணம் செய்து கொண்டாலும் வேறு சிலருட னும் உறவு வைத்திருந்தாள் அப்ரோ டைட்.
கிரேக்கத்தில் கோயில்கட்டி கோலாக லமாகப் பண்டிகையும் கொண்டாடப் படும் அளவுக்கு புகழ் பெற்றவள் அப் ரோடைட். அந் தப் பண்டிகையின் பெயர் ‘அப்ரோடிஸியாக்’. இந்தப் பண்டிகை யின் பெயர்தான் செக்ஸ் உணர்வைத் தூண்டும் பொருட்களுக்கு சூட்டப்பட் டது.
தன் காம இச்சையை அதிகரித் துக்கொள்ள ஒவ்வொரு கால த்திலும் மனிதன் ஒவ்வொரு விதமான பொருளைப் பயன் படுத்தி வந்திருக்கிறான். கி.மு . 4000-ல் பாபிலோனில் அரிசி யிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஒயி னைக் குடித்தா ல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் என்று அப்போது நம்பினார்கள்.
கி.மு. 200-ல் எகிப்தில் ‘மேன்ட்ரேக்’ (Mandrake) என்ற செடியின் சாறைக் குடித்தால் மெத்தை வித்தையில் புகுந்து விளையா டலாம் என்று மக்கள் நினைக் க, அந்த செடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தனர்! கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுதும் மேன்ட்ரேக் செடியின் சாறை, பிறந்த குதி ரையின் தலை மீது இருக்கும் ‘ஹிப்போமேனஸ்’ என்ற நுரை போன்ற பொருளு டன் கலந்து அருந்தினார்கள்.
ரோம் நாட்டில் ‘ஆர்ஸிட்’ என்ற பூவின் இதழ்களி லிருந்து ‘சாடிரி ன்’ என்ற பானம் தயாரித்துக் குடி த்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக் கும் என்று நம்பி மொடாக்குடி குடித்தார்கள். ‘ஸ்பானிஷ் ஃபிளை’ என்ற ஒருவகை சிறு பூச்சி யைப் பிடித்து வறுத்துப் பொடி செய்து, அந்தப் பொடியைத் திராட்சை சாறில் கலந்து அருந்தினா ர்கள். இதுபோன்ற காமத்தைத் தூண் டிவிடும் விதவிதமான அப் ரோடி ஸியாக் வகையறாக்கள் ஒவ் வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கேற்ப பயன்பாட்டில் இருந்தன… இருக்கின்றன!
காமத்துக்காகக் காளான்களை யும் பதம்பார்த்த மக்கள், தங்கத் தையும் விட்டுவைக்கவில்லை. எளிதில் ஜீரணமாகும் வகையி ல் அதேசமயம் இச்சையைத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கை யில் தங்கத்தைப் பஸ்பமாக்கி சாப்பிட்டார்கள்.
இந்தியாவிலும் இதுபோன்ற பொருட்கள் மீது நிறைய நம்பிக் கைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. கி.மு. 600-ல் எழுதப்ப ட்ட பழமை வாய்ந்த ‘சரக்கா சம் ஹிதா’ என்ற ஆயுர்வேத நூலில் ஒரு அத்தியாயமே “அப்ரோடி ஸியாக்” வகை பொருட்களின் மகத்துவத்தைச் சொல்வதற்கா க ஒதுக்கப் பட்டிருக்கிறது.
காம இச்சையைத் தூண்டும் பொருட்களை ‘சக்கரா சம்ஹிதா’ உணவுப் பொருட்கள், மருந்து கள், மனதைத் தூண்டி விடுதல் என்று மூன்று வகையாகப் பிரி த்திருந்தது. காம இச்சையை அதிகப்படுத்தும் ஐம்பது வகை யான மருந்துகளையும் வகைப் படுத்தி இருந்தது.
கி.பி. 300-ல் வாத்ஸ்யாயனர் தன்னுடைய ‘காம சாஸ்திரம்’ ஏழா ம் பாகம் இரண்டாம் அத்தியா யத்தில் (அத்தியாய தலைப்பு: ஒளப நிஷதிகம்) செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டிவிடவும், செக்ஸ் பிர ச்னைகளைத் தீர்க்கவும் சில மரு ந்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்குப் பின்னர் சோதலா என்பவர் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ‘கதா நிக்ரஹா”, மற்றொரு நூலா ன “சாரங்கதரா சம்ஹிதா’ ஆகி ய நூல்களில் கஞ்சா செடிக்கு செக் ஸ் ஆர்வத்தைத் தூண்டிவி டும் ஆற்றல் உண்டு என்று குறிப்பிட்டி ருக்கிறார். இதன் மூலம் பல நூற் றாண்டுகளாகவே செக்ஸ் உணர் வைத் தூண்டிவிடும் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.