ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக அளவில் செக்ஸ் ஆசை ஏற்பட ஹார்மோன் தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக செக்ஸ் ஆசை இருபாலருக்கும் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மருத்துவ ரீதியில் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. டெஸ்டோஸ்டெரோன் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் அதிக அளவில் செக்ஸ் ஆசை ஏற்படுகிறது. ஹார்மோன் அதிக அளவில் சுரப்பது இணைக்கு தெரியாது என்பதால், அதிகப்படியான செக்ஸ் உணர்வையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.
அதே போல் மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனம் அதிக அளவில் சுரந்தாலும் செக்ஸ் ஆசை எல்லை மீறுகிறது. இந்த டோபமைன் கெமிக்கல் உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல் மனநிலை மாறுவதும், பைபோலார் டிசார்டர் போன்ற பிரச்னைகளும் அதிக செக்ஸ் உணர்வு ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.