இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :
5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
– இவை எல்லாம் கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்.
சரி… இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.
3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு – இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.
– இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஒரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், “கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்” என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்.