ஜல்சா தகவல்:அமெரிக்காவில் 44 வயது பெண் துணை தலைமையாசிரியர் 19 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த குற்றத்திற்காக அவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை அல்லது 200 டொலர் அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் South Carolina மாகாணத்தில் உள்ள Airport மேல்நிலைப் பள்ளியில் துணை தலைமையாசியராக இருப்பவர் Dawn Proffitt Diimmler(44).
இவர் தன்னுடைய பள்ளியில் பயிலும் 19 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தன்னுடைய வீட்டில் பல முறையும், வளாகத்திலும் இப்படி இருந்துள்ளனர்.
இதையடுத்து இந்த தகவல் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததால், இது குறித்து பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அதன் பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது மாணவன் 19 வயது என்றாலும் வளாகத்தில் இது போன்ற செயலில் ஈடுபடுவது ஒழுக்கமற்றது என்று கூறி, கடந்த வெள்ளிக்கிழமை Dawn Proffitt Diimmler-க்கு 30 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லது 200 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொலிசார் இது தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஒரு வழக்கிற்கு தான் தீர்ப்பு வந்துள்ளதாகவும், மற்றொரு வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியானால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.