கர்ப்ப காலத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனையின் முக்கியத்துவமும் – இதன் மூலம் கண்டறியும் குறைகளும்!
கர்ப்ப காலத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை யின் பங்களிப்பு
தற்காலத்தில் எந்தத்துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் உள்நுழைக்கப்பட்டு வேலைகள் திறம்படவும் துரிதமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்
மருத்துவத்துறையை பொறுத்த வரையிலும் பல்வேறுபட்ட நவீன யுக்திகள் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்ப ட்டு வருகின்றன.
பெண் நோயியல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இவ்வாறான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள், யுக்திகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முக்கியமான பரிசோதனை தற்காலத்தில் பாவி க்கப்பட்டு வரும் ஸ்கேன் பரிசோதனையாகும். இது கர்ப்பக்காலத்திலும் சரி பெண்களின் கர்ப்பப்பை சூலகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் சரி வைத்திய நிபுணர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன.
கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வதால் உண்டாகும் நன்மைகள், செய்வதன் தேவை மற்றும் விளைவுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.
கர்ப்பக்காலத்தில் சாதாரண ஸ்கேன் பரிசோதனை (ருடவசய ளடிரனே ளஉயn) செய்வதால் தாய்க்கோ சிசுவுக்கோ எந்தவித சிக்கல்களும் ஏற்படமாட்டாது. கர்ப்பக்காலத்தில் எந்தவொரு மாதத்திலும் அதாவது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாத ம் வரைக்கும் தேவைக்கேற்ற வகையில் எவ்வித தயக்கமும் இன்றி ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும். இப்பரிசோத னைமூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம், அதன்சரியான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்சிக் குறைபாகள், சிசு இருக்கும்விதம், அங்கவீனக்குறைபா டுகள், சிசுக்களின் எண்ணிக்கை மற் றும் தொப்புள், நச்சுக்கொடி இருக்கும் விதம் எனப்பல விடயங்களை அறிந்து அவற்றுக்கான சரியான சிகிச்சைக ளை சரியாகத் திட்டமிட்டு சிறந்த கர்ப்பக்கால பராமரிப்பை வழங்கக்கூடியதாக உள்ளது. இதன்மூலம் ஆ ரோக்கியமான சிறந்த குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் பரிசோதனையானது பல்வேறுபட்ட நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. இது 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம் என பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இடையிடையேயு ம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆரம்ப கர்ப்பக்காலத்தில் அதாவது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையின் நோ க்கம்
ஆரம்ப கர்ப்பக்காலத்தில் அதாவது முதல் மூன்று மாதங்களுள் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையில் பல முக்கிய விடயங்கள் அறியப்படும். அதாவது கருவானது கர்ப்பப்பையின் உள்ளே சரியான இடத்தில் தங்கி உள்ளது உறுதிப்படுத்தப்படும். அத்துடன் கருவானது ஆரோக்கியமாக உள்ளதா என்பதையும் அறிவதுடன் எத்தனை கருக்கள் உள்ளன என் பதையும் அறிய முடியும்.
அத்துடன் இந்த ஸ்கேன் பரிசோதனையின் போதுதான் சிசுவின் பருமனை அளந்து சரியான பிரச வ எதிர்பார்ப்பு திகதியைக் குறி ப்பிடலாம்.
இவ்வாறு சில பெண்கள் இறுதியாக மாதவிடாய் வந்த திகதியை மறந்திருந்தால் சரியான பி ரசவ எதிர்பார்ப்பு திகதியை முதல்மூன்று மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் தான் சரியாக கண்டறிய முடியும்.
அதற்கு பிந்திய மாதங்களில் ஸ்கேன் செய்து இவ்வாறு திகதியை சரியாக கணிப்பிட முடியாது. அத்து டன் முதல் 3 மாதங்களில் செய்யப்ப டும் ஸ்கேனில்தான் பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள பைப்புரோயி ட் கட்டிகள் மற்றும் சூலகத்தில் உள்ள சூலகக்கட்டிகள் பற்றிய தகவ ல்களை அறிய முடியும்.
கர்ப்பக்காலத்தில் சிசுவின் அங்கவீனக் குறைபாடுகளை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஸ்கேன் பரிசோதனை
சிசு முழுமையாக விருத்தியடைந்து சகல பாகங்களும் உருவான பின்னர் சிசுவின் உறுப்புக்களில் ஏதாவது குறைகள் இருக்கின்றதா என ஸ்கே னில் அறிய முடியும். இவ்வாறு அங்கவீனக் குறைபாடுகளை அறியும் ஸ்கே ன் 5 மாத கர்ப்பக்காலத்தில் அதாவது 18-20 வாரங்களில் செய்ய முடியும். இதன்போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இரு தம், கால்கள் என பிரதான உறுப்புக்களில் குறைகள் இருப்பதனை அறி ய முடியும்.
இவ்வாறான ஸ்கேன் பரிசோதனை குறிப்பாக பெண்களில் நீரிழிவு நோ ய், காக்கை வலிப்பு, இருதய நோய் உள்ள போதும் மற்றும் சொந்த உறவுகளில் திருமணம் செய்துகொண்டவர்களிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரியாக போலிக் அசிட் (குடிடiஉ யஉனை) விட்டமின் மாத்திரைகளை எடுக்காதவர்களிலும் மேலு ம் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்டப்படாத மாத்திரைகளை உட்கொண்டவர்களிலும் இவ்வாறான அங்கவீன குறைகளை கண்டறி யும் ஸ்கேன் அவசியம். ஏனெனில் மேற்குறிப்பிட்டவர்களில் சிசுவில் சில குறைகள் வருவதற்கு சிறிய வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் 35 வயதுக் கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கு ம் போதும் இதுபோன்ற ஸ்கேன் பரிசோதனை அவசியம்.
நிறமூர்த்த குறைபாட்டால் ஏற்படும் டவுன்ஸ் குழந்தைகளை (னுடிறn’ள ளலனேசடிஅந) கண்டறியும் ஸ்கேன் பரிசோதனை
முதல் மூன்று மாதத்தி ல் செய்யப்படும் ஸ்கே னில் சிசுவின் கழுத்தில் பிற்பகுதியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடுதலாக தடிப்படை ந்திருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்தேகம் கொள்ள முடியும். அத்துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்தியடையாத தன்மையையும் பார்க்க முடி யும். இவ்வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்தேகம் இரு ந்தால் இதனை உறுதிப்படுத்த மேலு ம் சில பரிசோதனைகளாக இரத்தப்பரிசோதனை மற்றும் சிசுவின் நிறமூர் த்தப் பரிசோதனை என்பன செய்ய முடியும். இதன்மூலம் இவ ற்றை உறுதிப்படுத்தலாம்.
பிந்திய கர்ப்பகாலத் தில் (8ஆம் மாதம்) செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை
8 மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறிய முடியும்.இதன் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறை கள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும். மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப் படும் ஸ்கேன் மூலம் சிசு இருக்கும் விதம், தொப்புள் நச்சுக்கொடி அமைந் திருக்கும் விதம் என் பவற்றை அறிய லாம்.
இவ்வாறு ஸ்கேன் பரிசோதனை கர்ப்ப க் காலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும்.இதன் மூல ம் பலவித தகவல்களை பெற முடியும்.