Home சமையல் குறிப்புகள் சாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி

சாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி

301

நம் முன்னோர்கள் நம்முடைய உடல் நலம் பேணுவதற்கு சேப்பங்கிழங்கை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

அந்தவகையில் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • சேப்பகிழங்கு – கால் கிலோ
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • வெந்தயம் – 14 தேக்கரண்டி
  • சின்னவெங்காயம் – 1 கைப்புடி அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா தூள் – அரை தேக்கரண்டி
  • தக்காளி சின்னது – 2
  • பூண்டு பற்கள் -5
  • புளி கரைசல் – சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்
  • தேங்காய் பால் – 150 மி.லி
செய்முறை

சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி நன்கு காய்ந்ததும் அதில்நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சேப்பகிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.

அடுத்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.