Home ஆரோக்கியம் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற இதில ஒரு கப் குடிங்க…!

அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற இதில ஒரு கப் குடிங்க…!

45

குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம்.

இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்….

தேவையான பொருட்கள்!

தேன் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன்

ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி – தேவையான அளவு

செய்முறை | ஸ்டெப் #1
சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.

செய்முறை | ஸ்டெப் #2
நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #3
எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கவும்!

செய்முறை | ஸ்டெப் #4
இது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற செயல்பட துவங்கிவிடும். நல்ல பலனளிக்கும்.