தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
வெங்காயம் – 300 கிராம்
தக்காளி – 300 கிராம்
எண்ணெய் – சிறிதளவு
க.பட்டை – 1 இஞ்ச்
லவங்கம், ஏலக்காய் – தலா -2
இஞ்சி – வெ. பூண்டு விழுது – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் (சிறியது) – பாதியளவு
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கேசரி கலர் – சிறிது
காய்கள்…
உருளைக்கிழங்கு – 100 கிராம்
கெரட் – 50 கிராம்
பீட்ரூட் – 50 கிராம்
பட்டாணி – 50 கிராம்
கோலிஃப்ளவர் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
செய்முறை :
காய்களைக் கழுவி, அரிந்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அரியவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து, கழுவி வைக்கவும்.
அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாயகன்ற நொன்-ஸ்டிக் பாத்திரத்தை காய வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி க.பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி – வெ.பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி தணலைக் குறைவாக வைக்கவும்.
பச்சை வாடை போனதும் உருளை, கெரட், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
தக்காளியைக் குழைவாகும் வரை கிண்டி மீதி கோலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1/2 எலுமிச்சை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கி சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு போட்டு முக்கால் வேக்காடாக வேக விடவும். அரிசி ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்க ஒரு டீஸ்பூன் எண்ணெய், 1/2 எலுமிச்சைச்சாறு சேர்த்து வடிக்கவும். வடித்த அரிசியை காய்கறி வைத்திருக்கும் பாத்திரத்தில் தட்டி மேலே கேசரி கலரை கரைத்து தெளித்து, புதினா மற்றும் கொத்தமல்லி தூவி சிறிது நெய் ஊற்றி 20 நிமிடங்கள் தம் போட்டு இறக்கவும்.
*பீட்ரூட் சேர்த்தால் நிறம் மாறிவிடும். அதனால் பீட்ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அப்படி அதிகமாக நிறம் மாறாமல் இருக்கும்.