பெண்களின் வாழ்க்கையும், ஆண்களின் வாழ்க்கையும் முற்றிலும் மாறுப்பட்டவை. வேலை, உறவு போன்றவற்றுள் பெண்களின் பார்வையும் கோணமும் மாறுப்பட்டு தான் திகழும். ஆண்கள் தங்களை சுற்றி மட்டும் யோசிப்பார்கள். பெண்கள் அவர்களை சுற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து வைத்து யோசிப்பார்கள்.
இது போன்ற காரணத்தால் பெண்கள் அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் கொண்டு, தங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு தான் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை இழப்பது அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த 8 விஷயங்கள் இதற்கான காரணமாய் திகழ்கின்றன…
அதிக உணர்சிகள்! அச்சம், சந்தோஷம், மகிழ்ச்சி, காதல், என எல்லா வகையிலான உணர்சிகளையும் அதிகளவில் மனதில் ஏற்றிக் கொள்வது பெண்கள் அதிக சங்கடமாக உணர முக்கிய காரணமாக இருக்கிறது. பலதரப்பட்ட உணர்சிகள் மனதில் அதிகளவில் குவியும் போது மன அழுத்தம் அதிகரிக்க துவங்குகிறது
சோர்வு! அதிகப்படியான வேலை அல்லது பிரச்சனைகள் காரணமாக ஒரு பெண் எளிதாக உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இந்த சோர்வை அவர்கள் உணராமல் இருக்க, அவருக்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும். அவர் அதிக வேலை செய்து வரும் தருணத்திலும் கூட நீங்கள் அரவணைப்பாக நான்கு வார்த்தை பேசினால் அவர்கள் அந்த சோர்வை உணராமல் இருப்பார்கள்.
அதிக பொறுப்புகள்! குழந்தை வளர்ப்பு, அலுவல் வேலை, மனைவி, சமையல், அறிவுரை கூறுபவர், வீட்டு நிர்வாகம், வீட்டு வேலைகள் என ஒருப் பெண் அதிக பொறுப்புகளை சுமக்கும் போது சந்ஷோசம் இன்றி ஆகிவிடுகிறார். இதை போக்க அவரிடம் இருந்து சில பொறுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அல்லது எல்லா பொறுப்புகளிலும் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
காணப்படாதவை… ஒரு பெண்ணின் வாழ்வில் காணப்படாத விஷயங்கள் அதிகரிக்கும் போது அவள் மகிழ்ச்சியை இழக்கிறார். பிடித்த வேலை, கணவனின் அன்பு,அரவணைப்பு, பிள்ளை செல்வம், வீடு, சொந்தங்கள் என இதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.
நேரம்! கணவன், பிள்ளைகள், உறவுகள், வீடு என மற்ற எல்லாருடனும் நேரம் செலவழித்துவிட்டு தனக்கான நேரத்தை ஒரு பெண் இழக்கும் போது அவள் தன் சந்தோசத்தை இழக்கிறாள்.
முன்னுரிமை! ஒரு சமயத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என தெரியாமல் குழம்பும் தருணங்களில் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இது போன்ற தருணத்தில் கணவனாக உடன் இருந்து நீங்கள் அவர்களுக்கு உதவி புரிய வேண்டியது அவசியம்.
உதவி! ஒருசில சந்தர்பங்களில், வேலைகளில் இதற்கு யாரிடம் உதவி கேட்பது என அறியாமல் / தெரியாமல் பரிதவிக்கும் நேரத்தில் பெண்கள் மகிழ்ச்சியை இழக்கலாம். ஆண்கள் அளவிற்கு தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களிடம் இல்லை.
அழுத்தம்! தற்போதைய சூழலில் பெண்கள் வீட்டு வேலை, அலுவலக வேலை என கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்றுக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு வாழ்க்கை வாழும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. நாள்பட இந்த அழுத்தம் அவர்களுடைய மகிழ்ச்சியை கரையான் போல தின்றுவிடுகிறது.