Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ரொம்ப ஒல்லியா இருக்கீங்கன்னு கவலையா இருக்கா?… இத சாப்பிடுங்க… ஒரே மாசத்துல மாற்றத்த பாருங்க..

ரொம்ப ஒல்லியா இருக்கீங்கன்னு கவலையா இருக்கா?… இத சாப்பிடுங்க… ஒரே மாசத்துல மாற்றத்த பாருங்க..

19

உடல்பருமனை எப்படி குறைப்பது என்று ஒரு பக்கம் திண்டாடிக் கொண்டிப்பவர்கள் பலர். அதேபோல் எலும்பும் தோலுமாக இருப்பவர்கள் என்ன சாப்பிட்டாலும் என்ன் செய்தாலும் சதை போடுவதே இல்லை. தேறாமல் ஒல்லிக்குச்சியாக இருக்கிறோமே என்கிற கவலை இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.

குழந்தையில் கொழுகொழுவென இருக்கும் சிலர் வளர வளர அநியாயத்துக்கு மெலிந்துவிடுகிறார்கள்.

அப்படி ஒல்லியாக இருப்பவர்கள் எதையெதையோ சாப்பிட்டும் தேறாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சாப்பிடும் எதையும் ஒரு வரைமுறையோடு முறையாகப் பின்பற்றுவதில்லை.

கீழ்வரும் இந்த டயட் பிளானை மட்டும் தொடர்ந்து ஒரு மாதம் வரை கடைபிடித்துப் பாருங்கள். ஒல்லியான உங்கள் தேகம் தானாகத் தேறி, நீங்களும் கொழுகொழு பப்பாளியாக மாறிவிடலாம்.

பொதுவாக அவர்கள் எப்போதும் சாப்பிடும் கலோரி அளவைக் கொஞ்சம் கூட்டினாலே போதும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத உணவுகளை அதிகப்படுத்த வேண்டும்.

காலை உணவு

1. 2 / 3 முட்டை, 2 பிரட் டோஸ்ட், 1 கப் பாலுடன் செரல்

2. ஒரு பெரிய கப் நிறைய ஓட்ஸ்

3. 2 ஸ்டஃப்டு பரோட்டா / உப்புமா / அவல் உப்புமா

இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை காலை உணவாக உட்கொள்ள வேண்டும். ஒரே மாதிரியாக சாப்பிட எரிச்சலாக இருந்தால் இந்த மூன்றையும் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றாக எடுத்துகு் கொள்ளலாம்.

காலை 11 மணிக்கு

ஏதாவது ஒரு பழம், ஒரு கப் தயிர், பாதாம், முந்திரி போன்றவை கலந்த கலவை (அல்லது) ஏதாவது பிடித்த ஜூஸ் ஒரு கெிளாஸ்

மதிய உணவு

2 (அ) 3 ரொட்டி, ஒரு கப் காய்கறிகள், ஒரு கப் பருப்பு, (சிக்கன்/ மீன்/ முட்டை)

அசைவம் சாப்பிடாதவர்கள் அதற்கு பதிலாக ஒரு கப் சாதமும் ஒரு கப் தயிரும் கூடவே கொஞ்சமாக பன்னீரும் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் எடுத்துக் கொள்வது மிகமிக அவசியம்.

மதியம் 3.30 மணிக்கு

வெஜ் (அ) நான்- வெஜ் சாண்ட்விச் (சீஸ் அல்லது மையானோஸ் சேர்த்து)

(அல்லது) ஒரு கிளாஸ் மில்க் ஷேக்

இரவு உணவு

மதிய உணவைப் போலவே சாப்பிடலாம். சாதத்துக்கு பதிலாக மட்டும் சப்பாத்தி அல்லது ரொட்டி

(அல்லது)

2 ரோஸ்ட் / கிரில் சிக்கன்/ தந்தூரி சிக்கன்

(அல்லது)

அவனில் வேகவைத்த மீன் மற்றும் உருளைக்கிழங்கு

(அல்லது)

வெஜ் சாண்ட்விச்/ கிரில்டு வெஜ் பர்கர் (பன்னீர்/ உருளைக் கிழங்கு)