romance in dream:என்றாவது உங்களுக்கு… தீவிரமான, எதிர்பாராத அல்லது முற்றிலும் சம்மந்தமே இல்லாத கலவியில் ஈடுபடுவது போன்ற கனவுகள் வந்திருக்கின்றனவா? இதை எப்படி ஒப்புக் கொள்வது, ஆம்! என்று வெளியே கூறினால்… ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் தான் கனவுகளாக வரும் என்று சொல்லி.. தன்னை ஒரு செக்ஸ் அடிக்ட் போல காண்பார்களோ என பதற்றம் அடைய வேண்டாம்.
இப்படியான விசித்திரமான கலவிக் கொள்தல் போன்ற கனவுகள் வருவதை வைத்து யாரும் உங்களை எடைப்போட இயலாது. செக்ஸ் ட்ரீம் எனப்படும் இந்த கலவிக் கனவுகள் இதர கனவுகள் போல சாதாரணமான, இயல்பான கனவுகள் தான்.
எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் கலவி மீதான ஒரு ஈர்ப்பு வாழ்வில் ஒருமுறையாவது கொண்டிருப்பார் அல்லவா? இந்த கலவிக் கனவுகள் வர பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். சுயநினைவற்ற எண்ணங்களில் இருந்து இவை தூண்டப்பட்டிருக்கலாம்.
இந்த கலவிக் கனவுகள் சிலருக்கு அவர்களிடம் தோன்றும் விசித்திரமான கற்பனைகளின் விளைவாக கூட வெளிப்படலாம். ஆனால், இந்த கனவுகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என கூறப்படுகிறது. அனைவராலும் அறியப்படும் ஆறு கலவிக் கனவுகள் மற்றும் அதன் பின்னணியில் கூறப்படும் அதன் அர்த்தங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…
முன்னாள் காதலியுடன்…
முன்னாள் காதலி (லன்) அல்லது முன்னாள் மனைவியுடன் கலவியில் ஈடுபடுவது போன்ற கனவு பெரும்பாலானோருக்கு வரும் கனவாக காணப்படுகிறது. அவர்கள் மீது இன்னும் உங்கள் மனதில் தேங்கி இருக்கும் ஏக்கமும், அக்கறையும் தன் இதற்கு காரணம் என்று கூறிவிட முடியாது.
உங்கள் காதலி / காதலன் மீது உங்களுக்கு இருக்கு, கூறாமல் விடுப்பட்டு போன செக்ஸுவல் எண்ணங்கள், நீங்கள் இருவரும் கலந்துரையாடாத சில சமாச்சாரங்கள் போன்ற காரணங்களால் கூற அவர்களுடன் கலவிக் கொள்தல் போன்ற கனவு வெளிப்படலாம்
மேலதிகாரியுடன்… மேலதிகாரி அல்லது பாஸுடன் கலவியில் ஈடுப்படுவது போன்ற கனவு வருகிறது எனில், அது தெளிவாக வெளிப்படுத்தும் அர்த்தம்.. நீங்கள் அவரிடம் இருந்து அதிகமான அக்கறை அல்லது காதலை எதிர்பார்க்கிறீர்கள் என்பதே ஆகும். நீங்கள் பணிந்து போகிற அல்லது படுக்கையில் உங்கள் மீது வேறொருவர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது போன்ற நபராக இருக்கலாம். அந்த கனவு சாதாரண செக்ஸ் அல்லது ஒரு சிறந்த செக்ஸ் கனவாக இருக்கலாம். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்வில் முதலில் ஒரு கட்டுப்பாட்டை கண்டறிய வேண்டும். ஆனால், உங்களை வேறு யாரோ ஒரு நபரின் (அது உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் நபராக கூட இருக்கலாம்) கட்டுப்பாட்டில் இருக்கும் நபராக இருக்கலாம்.
சகோதர /ரி (அ) நண்பர்களின் காதல்… கனவாக இருப்பினும் இது முற்றிலும் நடக்கவே கூடாத என்பது தான் யாராக இருந்தாலும் எண்ணுவார்கள். ஆனால், இந்த கனவின் பின்னணியில் மறைக்கப்பட்ட ஒரு பெரிய ஆசை இருப்பதை அறிந்துக் கொள்ள முடியும். சகோதர / சகோதரியுடன் அல்லது தோழன் / தோழியின் தற்போதைய அல்லது பிரிந்த காதல் துணையுடன் உறவு கொள்வது போன்ற கனவு வருவதற்கான காரணம், உங்கள் இருவருக்கு மத்தியில் ஒரு நெருக்கமான உறவு இருந்திருக்கலாம். அது வெறுமென அன்பு, பாசம், அக்கறையாக மட்டுமே கூட இருந்திருக்கலாம். அல்லது ஒருவருக்கு ஒருவர் பெரிய உதவி செய்திருக்கலாம். உங்கள் ஆழ்மனது அந்த அக்கறையை உதவியை, தவறுதாக செக்ஸுவல் இன்டென்ஷனாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அதனால் கூட அவர்களுடன் கலவியில் ஈடுபடுவது போன்ற கனவு வந்திருக்கலாம்.
ஓரினச்சேர்க்கை.. நீங்கள் ஸ்ட்ரெயிட் செக்ஸ் கொள்ளும் நபராக இருப்பினும், உங்கள் பாலின நபருடன் உறவில் ஈடுபடுவது போன்ற கனவு வருகிறதா? இதற்கான காரணம் அல்லது அர்த்தமாக அறியப்படுவது… நீங்கள் உங்கள் எதிர் பாலின நபருடன் ஈடுபடும் கலவி உறவு நீங்கள் எதிர்பார்ப்பது போலவோ, அல்லது உங்கள் ஆசையை பூர்த்தி செய்யும் அளவிற்கோ இல்லாமல் போகும் பட்சத்தில் இப்படியான கனவுகள் வெளிப்படலாம் என்று கூறப்படுகிறது.
மற்றவர் கலவுதல்… உங்கள் கனவில் வேறு சிலர் கலவியில் ஈடுபடுவது போல காட்சிகள் வருவது நிச்சயமாக உங்களது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு பரிச்சயமான நபர்களாக அல்லது பிரபலங்களாக இருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் குறித்த செய்தி ஏதேனும் ஒன்றால் ஏற்பட்ட தாக்கம் அல்லது நீங்கள் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை, அல்லது நீங்கள் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திருப்பது குறித்து அதிக கவனம் செலுத்துவது போன்றவை காரணமாக இருக்கலாம்.
ஊர் பெயர் தெரியாதவருடன்… அந்த நபர் யாரென்றே நீங்கள் அறியாதிருக்கலாம். அல்லது உங்கள் பள்ளி, கல்லூரி காலத்தில் நீங்கள் கண்ட நபராக இருக்கலாம். அல்லது அந்த நபரின் முகமானது மங்கலாகவோ, கனவே வேகமாகவோ கடந்திருக்கலாம். இதனால் நீங்கள் அவர் யாரென்ற தெளிவான காட்சி கிடைக்காமல், அறிய முடியாமல் குழப்பதில் ஆழ்ந்திருக்கலாம். அவர் யார் என்று அறிந்துக் கொள்ளும் புள்ளியில் தான் இத கனவின் கவனம் குவிந்திருக்கும்.
ஒருவேளை எங்கேனும் அவர் உங்களை வென்றவராக, உங்களை முந்தி சென்றவராக, உங்களை கவர்ந்தவராக கூட இருக்கலாம். ஒருவேளை உங்கள் மூளை நன்கு சிந்தித்து பார்த்தால், உங்களுடன் உறவுக் கொள்ளும் அந்த நபரை நீங்கள் உங்கள் வாழ்வில் பத்து மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக கண்ட / கடந்து வந்த ஒரு நபராக கூட இருக்கலாம்.