மனிதர்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டவை தான் ரோபோக்கள். அறிவியல், விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலியல் உறவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
2050 ஆண்டளவில் மனித உறவை மிஞ்சும் அளவுக்கு ரோபோக்கள் உறவில் ஈடுபடுத்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோபோ வல்லுநரான ஜோயல் சினல் மனிதர்கள் ரோபோக்களுக்கு அடிமையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.
தங்கள் ஆசைகளுக்கு ஏற்றவாறு ரோபோக்களை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறும் ஜோயல் சினல் விரும்பும் நேரத்தில் உறவு வைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாகிவரும் ரோபோக்களால், பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட மனிதக்கடத்தல்கள் குறைந்து விடும் என்பதுடன் ரோபோ பெண்களால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படாது.
உறவுக்கு பின்னர் முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படும். எது எப்படி இருந்தாலும், இது மனித உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாவதையே காட்டுகிறது.