உடல் நலம்:விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக நீட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு இடதுகாலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை அபானாசனத்தில் செய்ததுபோல் மார்பை நோக்கி மடக்க வேண்டும். இப்போது வலதுகாலை இடப்புற பக்கவாட்டில் மடக்கிய நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்.
இடது கையால் வலக்காலை பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கை வலப்பக்கம் தரையில் நீட்டியவாறும், தலை வலப்பக்கம் அதாவது எதிர்த்திசையில் திரும்பிய நிலையில் இருக்க வேண்டும். 10 நொடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும்.இப்போது இதேபோல இடது காலை வலப்பக்கமாகவும், இடது கை இடப்பக்கம் நீட்டியவாறும், தலையை இடப்புறம் திரும்பியவாறும் இருக்க வேண்டும். வலது கையால் இடது காலை பிடித்த நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும். இருபுறமும் மாற்றி மாற்றி 5 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்துகிறது. இறுக்கமான முதுகுத் தண்டுவடத்தை சீரமைத்து, நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
* இறுக்கமான தோள்களை தளர்வடையச் செய்கிறது.
* முதுகெலும்புகள் இணைந்து, தசைகள் நீட்சி அடைகின்றன.
* செரிமான மண்டலத்தில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதோடு குடல் இயக்கங்களை வேகப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்துவருவதால் வயிற்றில் அதிகப்படியாக சேர்ந்து அழுத்தம் கொடுக்கும் வாயுவை எளிதாக வெளியேற்ற முடிகிறது.
* அடிவயிற்று உறுப்புகளை மசாஜ் செய்கிறது மற்றும் வயிற்று தசைகளை உறுதிப்படுத்துகிறது.