Home ஆரோக்கியம் சிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

சிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

57

பொது மருத்துவம்:சிவப்பு மிளகாய் காரமானதும் அணைவருக்கும் நன்கறிந்த சிறந்த சுவையூட்டியாகவும் இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சிவப்பு மிளகாய் பழ வகை தாவரம். இவை மத்திய அமெரிக்கா நாட்டையே பிறப்பிடமாகவும் பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா போன்ற பல நாடுகளிலும் உற்பத்தி செய்கின்றனர்.

சிவப்பு மிளகாய் செடி ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரக் கூடிய வற்றாத சிறிய செடி.

இது மெல்லிய நீண்ட பழத்தின் நடுவில் கிறீம் நிற வட்டவடிவிலான தட்டையான கொட்டைகளையும், வெள்ளைக் கொடி போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.

இதில் உள்ள Capsaicinoids பொருள் அதனுடைய நிறத்திற்கு காரணமாவதுடன், இது மிகவும் காரமான சுவை கொண்டுள்ளது.

அத்துடன் capsaicin எனும் alkaline compound பல மருத்துவ நன்மைகளை வழங்குவதுடன் இது மிகவும் மிகவும் காரமானதும் நெடி மிகுந்த வாசனைப் பொருள்.

சிவப்பு மிளகாயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இரசாயனப் பொருட்கள், உடலில் பல நோய்கள் வராமல் தடுப்பதுடன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.

இது தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கும் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. சிவப்பு மிளகாயில் உள்ள விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடன்.

இது உடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் காரணிகளையும், புற்றுநோய்களிற்குரிய காரணங்களையும் உடலில் இருந்து வெளியேற்றுகின்றது.

விட்டமின் சி சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடனாக இருப்பதனால் உடலில் கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவுகின்றது.

தொடர்ச்சியாக விட்டமின் சி யினை எடுத்துக் கொள்வதனால் தொற்றுக்களிற்கு எதிராக செயற்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது.

இதில் பொட்டாசியம், மங்கனீஸ், இரும்பு, மக்னீசியம் போன்ற கனியுப்புக்கள் நிறைந்துள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்தை அதிகப்படுத்துவதுடன் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.

இதில் உள்ள இரும்பு மூளையின் அறிவாற்றலை அதிகரிக்கச் செய்வதுடன் அல்சைமர் நோய், டிமென்க்ஷியா போன்ற நோய் வருவதை குறைக்கின்றது.

சிவப்பு மிளகாயில் பி இன விட்டமின்கள் அணைத்தும் இருப்பதனால் உடலிற்கு தேவையான சக்தி கிடைக்கின்றது.