முட்டைகோஸ் குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. முட்டைகோஸின் வெளிப்பக்கத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்தில் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.
இதில் பலவிதமான தாதுக்கள், விட்டமின்கள், மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகவும், இரத்த அணுக்கள் அதிகரிப்புக்கு நல்ல மருந்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டைகோஸில உள்ள சில அற்புதத் தன்மைகளை பார்ப்போம்.
முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது.
பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
முட்டைகோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.