நாம் தெரிந்தோ, தெரியாமலோ பலவற்றை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக நம்பி கொண்டிருக்கிறோம்.
இது, வேலை, ஆன்மிகம், இல்லறம், சமூகம் என பலவற்றில், பலவகைகளில் பொருந்தும். அதில் ஒன்று தான் ஆணுறை விசயம்.
பொதுவாகவே, தாம்பத்தியம் மற்றும் அது சார்ந்தவை மேல் நமக்கு எழும் சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு அறிந்துக் கொள்வதில்லை.
நண்பர்கள் வட்டாரத்தில் கூறுவதை உண்மை என்று நம்புகிறோம். ஆனால், அவர்கள் கூறுவது உண்மையா, பொய்யா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை.
அப்படி ஆணுறை விஷயத்தில் நாம் மூடநம்பிக்கையாக நினைத்து வரும் சில விசயங்களை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…
உண்மை 1 :
ஆணுறை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். அது உண்மை இல்லை. ஆணுறை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பொதுவாக நமது சமூகத்தில் சிறுவர்கள் இதை வாங்க கூடாது என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர்.
உண்மை 2 :
சிலர் புட்டம் வழியாக செக்ஸ் வைத்து கொள்ளவர்கள். இப்படி செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது ஆணுறை தேவையில்லை என்று கூறுவார்கள். இது மிகவும் தவறு.. ஆணுறை என்பது கருத்தரிப்பதை தடுக்க மட்டுமல்ல, வைரஸ், பாக்டீரியா பரவாமல் இருப்பதற்கும் கூட. எனவே, ஆணுறை அணிய வேண்டியது அவசியம்.
உண்மை 3 :
ஆணுறையும் காலாவதி ஆகும். நீங்கள் பழைய ஆணுறையை உபயோகப்படுத்தினால் எரிச்சல், பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை உண்டாகும். மேலும், பழைய ஆணுறைகள் எளிதாக கிழிந்துவிடும்.
உண்மை 4 :
ஆணுறை பயன்படுத்தினால் உணர்ச்சி குறைந்துவிடும் என சிலர் கூறுவார்கள். அது உண்மை இல்லை. சில ஆணுறைகளின் வடிவமைப்பு உணர்ச்சி எட்டுவதை தாமதபடுத்துமே தவிர, அதை குறைக்காது.
உண்மை 5 :
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், ஆணுறை தேவையில்லை என்பது பொய். கருத்தடை மாத்திரை கருத்தரிப்பதை தான் தடுக்கும். பால்வினை நோய்களை தடுக்காது. எனவே, ஆணுறை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
உண்மை 6 :
ஒரு சிலர் இரண்டு ஆணுறைகளை பயன்படுத்தினால் நல்லது என கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஒன்றுடன் ஒன்று உராயும் போது எளிதாக கிழிய தான் வாய்ப்புகள் உண்டு. மேலும், இது அசௌகரியமான உணர்வை அளிக்கும். எனவே, ஒன்றை மட்டும் பயன்படுத்துங்கள்.
உண்மை 7 :
நம் துணை நல்லவர், அவருடன் உறவில் ஈடுபட ஆணுறை எதற்கு என எண்ணலாம். ஆனால், நம் துணைக்கே நோய்தொற்று, வைரஸ், பால்வினை நோய் தாக்கம் இருந்தால் ஆணுறை தேவையனாது தான்.