உங்கள் அறிய சேவைக்கு நன்றி.நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.
(தமிழாக்கம்)
பதில்.
ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும்
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள்
வருடத்திற்கு .150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.
இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.
நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது..
நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.
நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது.
ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும்.
ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்)
பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.
அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.
அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.
இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.
இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.
அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..
ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.
முதலாவதாக நீங்கள் ஆணுறை பாவிப்பதா , லூப் போடுவதா உகந்தது என்று கேட்டு இருந்தீர்கள்.அது நீங்கள் எவ்வளவு காலத்திற்கு
கர்ப்பத்தைப் பிற்போட நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
நீண்ட காலத்திற்கு ( பல மாதங்களுக்கு) கர்ப்பத்தைப் பிற்போட நினைத்தீர்களே ஆனால் உங்கள் மனைவி சொல்வது போல
லூப் போட்டுக் கொள்வதே உகந்தது.
ஆணுறை நம்பகத்தன்மை அற்றது.
உங்கள் இரண்டாவது கேள்வியை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இயற்கையாக கர்ப்பத்தை
பிற்போட எந்த காலப் பகுதியில் உறவில் ஈடுபட வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.