Home காமசூத்ரா புதிய தம்பதிகள் தாம்பத்திய உறவில் வெறுப்புவர காரணம்

புதிய தம்பதிகள் தாம்பத்திய உறவில் வெறுப்புவர காரணம்

35

தாம்பத்திய உறவு:திருமணமான புதிதில் தம்பதிகளால் தாம்பத்தியம் இன்றி இருக்க முடியாது என்பதை போல் இருப்பார்கள். பின் படிப்படியாய் ஈடுபாடு குறைய துவங்கும். 30 வயதுகளில் சற்று குறைவாகவும், நாற்பதுகளில் மிகவும் குறைந்து இறுதியில் முற்றிலும் ஆர்வமின்றி போய்விடும். ஆனால், தாம்பத்தியத்தை விரும்பாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இருப்பினும், சில நேரத்தில் தாம்பத்தியத்தில் விருப்பமின்மை, ஈடுபாடின்மை போன்றவை மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும். இங்கு தாம்பத்தியத்தின் மீது எரிச்சல் ஏற்படுத்தும் 5 விஷயங்களை பார்க்கலாம்.

1 துர்நாற்றம்
உடலுறவில் ஈடுபடும் போது உடலை தூய்மையாக வைக்க வேண்டியது அவசியம். அவ்வாறில்லாமல், உடலில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம், பிறப்புறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றம் உங்கள் துணைக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உடலுறவில் ஈடுபாட்டை குறைக்கும். எனவே, உடலுறவில் ஈடுபடும் முன் உடலை சுத்தமாக வையுங்கள்.

2 கண்களில் எரிச்சல்
உடலுறவில் ஈடுபடும் போது ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் சாதாரண ஒன்று தான். ஆனால், அது தவறுதலாக கண்களில் பட்டுவிட்டால் கூட அதிக எரிச்சல் ஏற்படும். இது உங்கள் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடியாமல் செய்து விடும். எனவே, முடிந்தவரை இது போல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

3 ஆணுறையை தேடுதல்
உடலுவில் ஈடுபடும் போது, சில கொஞ்சல்களுடன் கூடிய முன் விளையாட்டுகளில் பெரும்பாலான தம்பதிகள் ஈடுபடுவார்கள். அப்படி அவர்கள் முன்விளையாட்டுகளில் ஈடுபட்டு முடித்த பின்னர் ஆணுறையை காணவில்லை எனில், அதை தேடி எடுப்பதற்குள் தாம்பத்தியத்தின் மீது வெறுப்பே ஏற்பட்டு விடும். முடிந்தவரை அவற்றை எடுத்து வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவது சிறந்தது.

4 ஈரப்பதமின்மை
உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பில் ஈரப்பதமில்லாமல் இருந்தால் அது பெண்களுக்கு அதிக வலியை ஏற்படுத்த கூடிய கொடுமையான ஒன்று. இது பெரும்பாலும் மாதவிடாய் முடிந்த பின், பிரசவத்தின் பின் இது போன்ற வறட்சி ஏற்படும். இதை தவிர்க்க முன் விளையாட்டுகளில் ஈடுபடலாம். சில இயற்கை ஈரப்பதமூட்டிகளை பயன்படுத்தலாம்.

5 மது
மது அருந்தி விட்டு சில ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவார்கள். பெரும்பாலும் பெண்கள் மதுவின் நாற்றத்தை விரும்ப மாட்டார்கள். இது இருவருக்குமான நெருக்கத்தை குறைத்து, உடலுவில் ஈடுபடும் ஆர்வத்தையும் குறைக்கும். மேலும், உங்கள் துணைக்கு உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.