ஆண்களின் அந்தரங்கம்:மலட்டுத்தன்மை குறித்த அச்சம், ஆண்களிடையே பெரிய அளவில் பரவிவருகிறது, அது அவர்களை பெருமளவில் பாதிப்பதாகவும் உள்ளது. ஆண்கள் இந்த விஷயத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை விந்தின் தரம் குறைதல், விறைப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் தோற்றத்தைக் குறித்த் கவலைப்படுகின்றனர், ஆனால் தெரிந்தோ தெரியாமலோ குழந்தை பெரும் திறன் மற்றும் விறைப்புத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீய பழக்கங்களைக் குறித்து தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.
புகைபிடித்தல் (Smoking)
புகைபிடிக்கும் பழக்கம் ஆண்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஓரிரு பேக்கட் சிகரெட் புகைப்பது விந்தணுக்களின் தரத்தை சேதப்படுத்தலாம். இது விந்தணுக்களின் நகர்திறன் மற்றும் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கலாம். இடைவிடாமல் புகைபிடிப்பவர்களின் (செயின் ஸ்மோக்கர்கள்) மனைவிகள் கர்ப்பமடைவது கடினமாக இருப்பது பரவலாகக் காணப்படும் ஒன்று. சிலசமயம், விந்தணுக்களின் மரபியல் குறைபாட்டால் அவர்களுக்கு கருச்சிதைவும் ஏற்படுகிறது.
வெந்நீர்க் குளியல் மற்றும் சானா (Hot baths and sauna)
ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்து விட்டு வந்த பிறகு சுடச்சுட வெந்நீர்க்குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் சிந்தித்து செயல்படுங்கள்! விந்தகங்கள் உடலுக்கு உள்ளே இல்லாமல் சற்று வெளியே இருப்பதற்குக் காரணமில்லாமல் இல்லை! விந்தணுக்கள் நம் உடலின் வெப்பநிலையைவிட 2-3 டிகிரி குறைவான வெப்பநிலையிலேயே ஆரோக்கியமாக வாழும். வெப்பநிலை அதிகமானால், விந்தணு உற்பத்தி முற்றிலும் நின்றுவிட வாய்ப்புள்ளது.
உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை (Inactive lifestyle)
தொந்தியும் உங்கள் குழந்தை பெறும் திறனைப் பாதிக்கலாம். உடல் எடை எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு உங்கள் ஹார்மோன்கள் கட்டுப்பாட்டை இழக்க வாயப்புள்ளது. அதிக எடை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைப் பாதிக்கிறது, இதனால் விந்தணுக்களின் தரமும் அளவும் பாதிக்கப்படுகிறது. உடல்பருமன் விறைப்பின்மைப் பிரச்சனையை ஏற்படுத்தலாம், ஆணின் உடலுறவில் ஈடுபடும் திறனையே பாதிக்கலாம். உடல் எடையைக் குறைபப்தர்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது நல்லது, இது பாலியல் வாழ்க்கையில் முன்பிருந்த நல்ல நிலையை நீங்கள் மீண்டும் அடைய உதவக்கூடும்.
உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் பழக்கங்கள் (Heat-causing habits)
மடியில் மடிக்கணினியை வைத்து நீண்ட நேரம் வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்கள், கவனமாக இருக்க வேண்டும். மடிக்கணினியில் இருந்து உருவாகும் மின்காந்த அலைகளும் வெப்பமும் பாலியல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கலாம். இறுக்கமான உள்ளாடை அணிவதும் உடல் வெப்பத்தை சில டிகிரி அதிகரிக்கலாம். ஆகவே, தளர்வான உள்ளாடைகள் அணிவது நல்லது, மடிக்கணினி வைத்து வேலை செய்வதானால், மேசை மீது வைத்து செய்வது நல்லது.
மன அழுத்தம் (Stress)
உங்களுக்குக் குழந்தைபெறும் திறன் இல்லை எனக் கண்டறிந்தால், அதோடு மன அழுத்தமும் உங்களுக்கு இருந்தால் அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடக்கூடும். மன அழுத்தம், பாலியல் செயல்திறனை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடும், உடலுறவில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, கர்ப்பமாக்க முடியவில்லை என்ற மன இறுக்கம் தொடர்ந்து உங்களை அழுத்தி மேலும் சிக்கலாக்கும். அதற்குத் தகுந்த சிகிச்சையை நாடுவதும், தியானம் போன்ற ஆசுவாசப்படுத்தும் மனப் பயிற்சிகளைச் செய்வதும் நல்லது.
இந்த ஐந்து பிரச்சனைகளைத் தவிர்த்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாலியல் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த வித்தியாசத்தை உணர்வீர்கள். மதுப்பழக்கத்தையும் புகைப்பழக்கத்தையும் விட்டொழிப்பது உங்கள் முழு உடல்நலனுக்கும் நல்லது, அதோடு, பாலியல் வாழ்க்கையையும் அது மேம்படுத்தக்கூடும்.