Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் தாய்மை அடைந்திருந்தால் கவனமாக இருக்கவேண்டியது

பெண்கள் தாய்மை அடைந்திருந்தால் கவனமாக இருக்கவேண்டியது

127

தாய் நலம்:கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக் கூடிய மிக முக்கியமான தொன்றாகும். இந்த சந்தர்ப்பத்தில் தாயானவள் தனது உடலை கவனித்துக் கொள்வது மட்டுமல்லாது தன்னுள் வளரும் சேயின் நலனையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

கர்ப்பகாலத்தை சுகமானதாக கழிக்க வேண்டுமாயின் சில விடயங்கள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும். அவை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

01. உடற்பருமன்
பி.எம்.ஐ அளவு 30 மற்றும் 30 க்கு மேற்பட்டிருந்தால் குறித்த தாய்க்கு பிரசவத்தின் போது அதிககஷ;டங்களைத் தாங்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கும் வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க முற்படுதல் வேண்டும்.

02. கருத்தரிப்பதற்கு முன்பிருந்த நிலைமைகள் தொடர்பில் கவனம் தேவை. எயிட்ஸ் போன்ற நோய்கள் தாய்க்கு இருப்பின் அது இலகுவில் சேய்க்கும் பரவிவிடும். அத்துடன் உயர் இரத்த அழுத்தம், எபிலப்ஸி, சிறுநீரக மற்றும் இதய நோய்கள், நீரிழிவு மற்றும் தைரொய்ட் என்பன ஒரு தாய்க்கு இருப்பின் அது பிரசவத்தை கடினமானதாக மாற்றும். எனவே இது போன்ற நிலைமைகளை போக்கிக் கொள்ள வேண்டும்.

03. கர்ப்பகாலத்தில் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் என்பன தாய்க்கு மட்டுமல்லாது சேய்க்கும் ஆபத்தைக் கொண்டு வரும். உண்மையில் சொல்லப் போனால் இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வரும். எனவே மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் என்பவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும். புகைபிடிப்பவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

04. ப்ரீக்ளம்சியா மற்றும் குழந்தை குறைபாடுகளுடன் பிறத்தல் என்பன ஒன்று மேற்பட்ட குழந்தைகளை சுமக்கும் தாய்மார்கள் பொதுவாக எதிர்நோக்கும் சவால்களாகும். இது போன்ற தருணங்களில் அடிக்கடி வைத்தியரை அணுகி சோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும்.