Home பெண்கள் தாய்மை நலம் பிரசவத்திற்கு பின் பெண்களால் ஏன் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதில்லை?

பிரசவத்திற்கு பின் பெண்களால் ஏன் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதில்லை?

23

பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாகிக் கொண்டிருப்பதும் தான். பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின்னான காலங்களில் தான் உடலிலும், மனதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.

இக்காலங்களில் பெண்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் மனதில் இருந்தாலும், சில நேரங்களில் முடியாமல் தவிப்பார்கள். இங்கு பிரசவத்திற்கு பின் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரசவத்திற்கு பின் பெண்களால் மீண்டும் கணவருடன் உறவில் ஈடுபட முடியாமல் போவதற்கு, உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இறுக்கமான மனநிலையில் இன்னும் இருப்பதும் தான் காரணம்.

குழந்தை பிறந்த பின் பெண்கள் பல முறை உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இன்னும் இருப்பது தான். அதிலும் சிசேரியன் செய்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

பிரசவத்திற்கு பின் பெண்களின் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகங்களில் இருந்து பால் வடியும். இதன் காரணமாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கடுமையான வலியை உணரக்கூடும்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் உறவில் ஈடுபடுவதில் சிரமத்தை அனுபவிக்க காரணம், பிரசவத்தினால் யோனியில் சுவர்கள் விரிவடையும். யோனி சுவர்கள் இறுக்கமாக இருந்தால் தான், உறவில் இன்பத்தைக் காண முடியும்.

பிரசவத்திற்கு பின்னான உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று உணர்வார்கள். இப்படி மனதில் தங்கள் அழகு குறைந்துள்ளதை நினைத்து பெண்கள் புலம்புவதாலும், உறவில் ஈடுபடுவதில் இடையூறாக இருக்கும்.

பிரசவத்திற்கு பின் குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கும். இதில் எப்படி உறவில் ஈடுபட நேரம் இருக்கும்.