Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் குழந்தைபேறு காலத்தின்போது இப்படி கூட செய்யலாம்…!

பெண்கள் குழந்தைபேறு காலத்தின்போது இப்படி கூட செய்யலாம்…!

92

தாய் நலம்:கர்ப்ப காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும் பெண்கள்பிரச்சினை இல்லாமல் குழந்தைகளை ஈன்றெடுக்க முடிவதாகத் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணிகளால் மலையேற்றத்திலும் கூட ஈடுபட முடியும் என்று புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது சிசுவுக்குப் போதுமான சத்தும், பிராணவாயுவும் கிடைப்பதில்லை என்று முன்பு நம்பப்பட்டது.

ஆனால் தாயின் உடல், சிசுவின் தேவைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டு சத்துகளை வழங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணிகளும் மற்றவர்களைப் போல வாரத்துக்கு 150 நிமிடம் நடைப் பயிற்சியில் ஈடுபடலாமெனப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் சில ஆய்வாளர்கள், கடினமான, மிதமிஞ்சிய உடற்பயிற்சி பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றனர்.

அதுபற்றி ஐஸ்லந்து பல்கலைக்கழகத்தில் 130 விளையாட்டாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில் அவர்களது பிரசவம், அதிக உடற்பயிற்சி செய்யாதவர்களைக் காட்டிலும் சுலபமானதாக இருந்தது தெரியவந்தது.

2016இல் நேப்பாளத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வு எவெரஸ்ட் சிகரத்தை நோக்கிய மலையேற்றத்தில் ஈடுபட்ட 7 மாத கர்ப்பிணியிடம் நடத்தப்பட்டது.

நேப்பாள வழிகாட்டியான அவர், எவரெஸ்ட் அடிவார முகாம் வரை மலையேறினார்.

தினமும் சுமார் 270 நிமிடம் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும், எவ்விதப் பிரச்சினையுமின்றி அவர் குழந்தையை ஈன்றெடுத்தார்.

பெண்கள் கர்ப்ப காலத்தின் போதுகூட உடல் வலிமையுடன் இருக்கின்றனர் என்பதை அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.