தாய் நலம்:பெண்களில் பலர் கர்ப்பம் தரித்து, நெடிய பயணமான கர்ப்ப காலத்தை தனக்குள் வளரும் குழந்தையை காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு, பிரசவம் நிகழப்போகும் நொடிக்காக காத்து இருப்பாள்; ஆனால், பல பெண்களுக்கு எதிர்பார்ப்பு என்றும் சரியான நேரத்தில் நிறைவேறியதாய் சரித்திரம் இல்லை
அதாவது பிரசவத்திற்கு என்று மருத்துவர் குறித்து கொடுத்த நாளுக்காக ஆவலாய் காத்து கொண்டு இருக்கும் பல பெண்களுக்கு, அந்த குறிப்பிட்ட நாள் வந்தும் பிரசவ வலி ஏற்படுவது இல்லை; அந்த நாளை கடந்து ஓரிரு தினங்கள், ஏன் ஒரு வாரம் ஆன பின் கூட பலர் வலி ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள்.
ஏன் வலி ஏற்படவில்லை? பெண்களுக்கு பிரசவத்திற்கான தகுந்த தினம் வந்தும் ஏன் பிரசவ வலி ஏற்படவில்லை என்று பலரின் மனதில் கேள்விகள் இருக்கலாம்; இதற்கு சரியான பதில் என்ன என்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்து இருக்காது; இல்லை எனில், குழந்தை வெளிப்படுவதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்காது மற்றும் குழந்தை வெளிப்படுவதற்கான பாதை தயாராக இல்லாமல், பாதையின் ஏதேனும் சில பிரச்சனைகள் இருக்கலாம்.
என்ன செய்வது? இவ்வாறு பெண்களுக்கு குறிப்பிட்டு கொடுத்த தேதியில் பிரசவம் நிகழவில்லை எனில், உடனே அவர்களுக்கு பிரசவ வலியை வரவழைக்க வேண்டும். பிரசவ வலியை தூண்டுவது பல வழிகளில் நிறைவேற்றப்பட்டாலும், பிரசவ வலியை தூண்டி விட மிக எளிமையான, அதிக பலனை அளிக்க கூடிய ஒரு முறை உள்ளது. அதன் படி நடந்தால், வலி குறையும்; ஏராளமான நன்மைகள் தாய்க்கும் சேய்க்கும் கிடைக்கும்.
அப்படி என்ன வழி!? கர்ப்பிணி பெண்களின் உடலில் இருக்கும் கோளாறுகளை நீக்கி, அவர்களின் உடலில் பிரசவ வலியை எந்தவொரு அதிகப்படியான அலட்டலும் வலியும் இல்லாமல் ஏற்படுத்தி, பிறகு ஏற்படும் பிரசவத்தின் வலியையும் பெரும்பான்மையாக குறைக்க உதவும் சிறந்த முறையின் பெயர் அக்குபிரஷர் என்பது ஆகும்.
உடலின் பிரச்சனை! உடலின் பல பாகங்களில் ஏற்படும் வலி அல்லது உடல் கோளாறு, அங்கு ஏற்பட்டு இருக்கும் ஏதேனும் ஒரு தேவையற்ற நிகழ்வின் காரணமாக, அதாவது வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக அல்லது உடல் பாகங்கள் இயங்கும் தன்மையை நிறுத்தி மந்தம் அடைதல், இயக்கம் பலவீனப்படல் போன்றவற்றால் உருவாகலாம்.
அக்குபஞ்சர் vs அக்குபிரஷர் இதனை சரி செய்ய சிறிய ஊசி கொண்டு உடல் பாகங்களில் குத்தி, உடல் பாகங்களில் இருக்கும் தேவையற்ற அடைப்பை எடுத்து விட அல்லது இயங்காமல் இருக்கும் உறுப்பை தூண்டி விட உதவும் முறை தான் அக்குபஞ்சர். இதே முறையை கையில் ஊசி இல்லாமல் கை விரல்களால் அழுத்தி, குத்தி செய்தால், அது அக்குபிரஷர் முறை ஆகும்.
கணவர் செய்யும் அக்குபிரஷர்! கர்ப்பிணியின் உடலில் முதல் மூன்று மாத காலத்தில் சரியான இடத்தில், மருத்துவரால் அல்லது மருத்துவர் மூலம் கற்றுக் கொண்டு கணவரால் அளிக்கப்படும் அழுத்தம் குழந்தையின் வளர்ச்சியை தூண்டும்; தவறாக செய்து விட்டால் கரு கலைந்து விட வாய்ப்பு உண்டு. ஆனால், மருத்துவரை விட கர்ப்பிணி பெண்ணின் கணவர் இந்த அழுத்தம் கொடுக்கும் முறையை கற்றுக் கொண்டு செய்தால், அது அந்த ஆணினை தன் குழந்தையோடு கருவில் இருக்கும் பொழுதே சேர்த்து வைக்க உதவும்.!
கர்ப்பிணிக்கு கணவர் செய்தல்! இந்த முதல் மூன்று காலத்தில் கூட மருத்துவரை செய்ய வைத்து விட்டு விடலாம்; ஏனெனில் கணவர் எசக்கு பிசக்காக ஏதேனும் செய்து விட்டால், அது குழந்தைக்கு அபாயம் ஆகி விடலாம். ஆகவே கடைசி மூன்று மாத காலகட்டத்தில் கணவர் செய்து விடுவது நல்லது; ஏனெனில் கடைசி மூன்று மாத கால கட்டத்தின் பொழுது கணவர் மட்டும் மனைவியுடன் இருந்து, சரியான முறையில் அக்குபிரஷர் முறையை மேற்கொண்டால், குழந்தையுடன் அப்பாவுக்கு உள்ள தொடர்பு தொடுதல் உணர்வு மூலமாக பலப்படும். மனைவிக்கும் கணவருக்கும் கூட தொடர்பும், பாசமும், காதலும், நேசமும் அதிகரிக்கும்.
எப்படி வலியை தூண்டும்? இவ்வாறு கர்ப்பிணி பெண்களில் வெளிப்புறமாக கொடுக்கப்படும் அழுத்தம் எப்படி பிரசவ வலியை தூண்டும் என்றால், குழந்தை உருவாகி இருக்கும் இடத்தில என்ன பிரச்சனை உள்ளது என்று மருத்துவர் எடுத்து கூறிய பின், அதற்கேற்ப அந்தந்த இடங்களில் கொடுக்கப்படும் அக்குபிரஷர் அழுத்தம், பெண்களின் உடலின் உட்புறத்தில் ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவும். பிரச்சனைகள் தீர்ந்தால், இனி குழந்தை வெளி வருவதில் எந்த ஒரு தடையும் இருக்காது.
எப்பொழுது செய்ய வேண்டும்? இந்த அக்குபிரஷர் முறையை கர்ப்பிணி பெண்களின் பிரசவ தேதி தாண்டி விட்டால், அதாவது பிரசவ தேதி தாண்டியும் குழந்தை பிறக்கவில்லை எனில், இந்த அக்குபிரஷர் முறையை மேற்கொள்ளலாம். மேலும் கர்ப்பிணி பெண்ணின் பனிக்குடம் உடைந்து விட்டால், உடனடியாக அழுத்தம் கொடுத்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். பிரசவ வலி ஏற்பட வேண்டிய தேதி வந்தும், வலி ஏற்படவே இல்லை எனில், அந்த சமயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்!