Home ஆரோக்கியம் கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு

கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு

50

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந்தாலும், அவர்களுக்கு தெரியாமலேயே கருசிதைவு ஏற்பட்டுவிடும். இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருசிதைவு ஏற்படும். அதற்கு காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது, கவனக்குறைவுடன் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவைகளே. இவை அனைத்து தேவையில்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதிலேயே இருக்கின்றன. அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரணமாக விடுகின்றனர். ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல், சில நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி, மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி போல் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.

* இரத்த போக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, விட்டுவிட்டோ, முதல் மூன்று மாதங்களில் ஏற்படுமாயின், அதுவும் கர்ப்பம் கலைந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளே. இவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவரை அணுகி, கருப்பையை சுத்தம் செய்துவிட வேண்டும். இல்லையென்றால், கருப்பையில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியேறாமல், கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.

* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும். ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்டதென்றால், அந்த உணர்வு போய்விடுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும். அவை அனைத்து ஒவ்வொருவரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங்களோ அல்லது அறிகுறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்