சில நாடுகளில் அறைகுறையாக டிரஸ் செய்வதற்கே தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதுவே சில நாடுகளில் பொதுஇடத்தில் மக்கள் நிர்வாணமாக திரிவதற்கும் அனுமதி உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
இதற்காகவே சில பிரத்யேகமான இடங்களும் அவர்கள் கட்டி இருப்பதும் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
பிரான்ஸ், நெதர்லாண்ட், ப்ளோரிடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிர்வாணமாக செல்லலாம். இதற்காகவே சாலைகள், பார்க், பீச், காடுகள் என எங்கே வேண்டுமானலும் ஃப்ரீயாக சுற்றலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் இருக்கின்றன.
பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் நிர்வாணமாக செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால், பொது இடங்களில் உடலுறவில் ஈடுபடுவதற்கு தடை. இங்கே கேப் டி’எஜ்டு என்ற பகுதி இந்த விஷயத்திற்கு உலகின் சிறந்த பகுதியாக திகழ்கிறது.
இங்கே வருடாவருடம் நூற்றுக்கணக்கான மக்கள் இதற்காகவே கூடுகின்றனர்.உலகின் முதன் நிர்வான பார்க் இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து சாலைகளில் நிர்வாணமாக செல்லலாம். சில இடங்கள் இதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கே செக்ஸ் கல்வி, விபச்சாரம், டாப்லெஸ் பீச்சுகள் என பல விஷயங்கள் இருக்கின்றன.
மியாமி, ப்ளோரிடாவில் இருக்கும் ஹவுல்ஓவர் எனும் பீச் நிர்வாணமாக நேரம் கழிக்க பிரபலமான இடமாக திகழ்ந்து வருகிறது. இங்கே இயற்கையின் அழகு மிதமிஞ்சி இருப்பது சிறப்பாகும்.
ஜெர்மனியின் ஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்களில் நிர்வாணமாக இருக்க லீகல் சட்டம் இருக்கிறது. முனிச் நகரில் முற்றிலும் லீகல் செய்யப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் நகர்களில் அர்பன் நிர்வாண பகுதிகள் என ஆறு இடங்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.