ஒருசிலர் பார்ன் பார்க்கும் பழக்கமானது ஒரே மாதிரியான தாம்பத்தியத்தில் ஈடுபடாமல், புதியதாக ஈடுபட உதவுகிறது என்று கூறுகிறார்கள். ஒரு சிலர் பார்ன் பார்ப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி அடையாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
பார்ன் பார்ப்பதால் இல்வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் சில ஆய்வுகள் இதை தீயது என்றும், சில ஆய்வு முடிவுகள் இது மகிழ்ச்சியான உறவை அனுபவிக்க உதவுகிறது என்றும் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை வெளியான ஆய்வறிக்கைகளில், 1) கணவன், 1) மனைவி, 3)கணவன் – மனைவி ஒன்றாக பார்ன் பார்பவர்கள் என மூன்று வகையிலான ஜோடிகளின் வாழ்வில் எப்படியான தாக்கங்கள் காணப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளன… அந்த தகவல்கள் குறித்து நாம் இங்கே காணலாம்.
எதிர்பார்ப்பு! அதிகம் பார்ன் பார்க்கும் பெண்கள் தங்கள் துணையிடம் அதிக எதிர்பார்ப்பு கொள்கிறார்கள். கனடா மனித தாம்பத்திய பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின் படி, பெண்கள் யாரெல்லாம் அதிகமாக பார்ன் பார்க்கிறார்களோ, அவர்கள் பார்ன் ஸ்டார்களுடன் தங்கள் துணையை ஒப்பீடு செய்து, அவர்களை போன்ற செயலை எதிர்பார்க்கிறார்கள். இதனால் எதிர்பார்ப்பு அளவு அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஆண்கள்! மனித தொடர்பியல் ஆய்வு பத்திரிக்கையில் அதிகமாக பார்ன் பார்க்கும் ஆண்கள் பிறரது செக்ஸ் வாழ்க்கை அதிக திருப்திகரமாக அமைவதில்லை என்று கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபடும் போது திருப்தி அடைவதில்லை. இதனால் அவர்கள் உறவில் எதிர்வினை தாக்கங்கள் உண்டாகின்றன என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாராட்டு… அதிகமாக பார்ன் பார்க்கும் பழக்கம் இருக்கும் நபர்கள் தங்கள் துணையை அதிகம் பாராட்டுவது இல்லை. இதனால் அந்த நபர்களின் துணை மகிழ்ச்சியற்று போகிறார்கள் என சோசியல் மற்றும் கிளினிக்கல் சைக்கலாஜி என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை மூலம் அறியப்படுகிறது. பார்ன் பார்க்கும் நபர்கள் அவர்களது செயலை, இயக்கத்தை அதிகம் ஒப்பிட்டுக் கொள்வதால் தான் இப்படியான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்றும் அறியப்படுகிறது. பெரும்பாலும் இவர்கள் உறவுக் கொள்ளும் நிலையுடன் தங்கள் துணையை ஒப்பிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றுதல்! அதிகமாக பார்ன் பார்க்கும் பழக்கம் இருக்கும் நபர்கள் தங்கள் துணையை அதிகம் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் செக்ஸுவல் பிஹேவியர் ஆவணக் காப்பகம் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வு அறிக்கை மூலம் அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், பார்ன் பார்க்கும் பழக்கம் இல்லாத நபர்களோடு ஒப்பிடுகையில், அதிகமாக பார்ன் பார்க்கும் நபர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பார்ன் பார்க்கும் நபர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்களா என்று கண்டறிவதும் கொஞ்சம் கடினமான காரியம் தான்.
வியப்பு! அண்ணே சம்மர்ஸ் எனும் பிரிட்ஸ் செக்ஸ் பொம்மை மற்றும் உள்ளாடை விற்கும் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், தம்பதிகள் யார் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பார்ன் படங்கள் பார்க்கிறார்களோ அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்களது தாம்பத்திய வாழ்க்கையும் கூட திருப்திகரமாக தான் அமைகிறது என்றும் இந்த ஆய்வு முடிவு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றாக சேர்ந்து பார்ன் பார்க்கும் தம்பதிகள் தங்கள் செக்ஸுவல் தேவை என்ன என்பதை அறிந்துக் கொள்கிறார்கள். மேலும், தைரியமாக தங்கள் ஆசை குறித்து பேசுகிறார்கள். இதனால் தான் இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைகிறது என்று இந்த ஆய்வறிக்கையில் காரணம் கூறப்பட்டுள்ளது.