Home குழந்தை நலம் போதையில் உறவுகொண்டால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?.

போதையில் உறவுகொண்டால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?.

28

சில வீடுகளில் கணவன்மார்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது, சாராயம் போன்றவற்றை அருந்திவிட்டும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவரெனில் அவருடைய உடலில் பிராணசக்தி, கொஞ்சமும் இருக்காது.
வீட்டில் அவருடைய மனைவி எந்தவித கெட்ட பழக்கங்களும் இன்றி ஆரோக்கியமாக மிகுந்த பிராணசக்தியுடன் இருப்பார். போதைப் பழக்கமுள்ள கணவர் பிராண சக்தி மிகுந்துள்ள மனைவியுடன் தாம்பத்யம் கொள்வதனால் மனைவி உடலில் உள்ள பிராண சக்தியை அவர் உறிஞ்சிக் கொள்கிறார்.

திரும்பவும் வழக்கம் போல போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதால் தினசரி குடித்துவிட்டு வருவதையும் தொடர்ந்து செய்து வருவார். இவ்வாறு தொடர்ந்து நடைப்பெற்றுவருவதால் அந்த மனைவியின் உடலில் உள்ள பிராணசக்தி குறைந்து கண்களுக்கே தெரியாமல் எப்படி நோயாளியாக மனைவி உருமாறினார்? என என்னும்படி ஆகிவிடுவார். எனவே இதைப் புரிந்து கொள்ள அனைவரும் முன் வர வேண்டும்.

புகையிலை மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையான ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபட்டு வரும்பொழுது அவர் மனைவி அதனால் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகிவிடுவார். எனவே அவரின் உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். எனவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நபர்கள் தயவுசெய்து அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.

கர்ப்பகாலத்தில் மனைவியுடன் தாம்ப்பத்யம் கொள்ளும், போதைப் பழக்கத்தில் உள்ள கணவனால் பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் இதுதான். ஒரு பெண் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களாலும், தியானம், யோகா, குடும்பத்தில் அக்கறை போன்ற சிந்தனைகளால் தன்னை பிராணசக்தியில் மேம்பட்டவளாகப் பராமரித்துக் கொள்கிறார்கள்.

இதையே தன் கணவனுக்குத் தந்து அவரை உத்வேகப் படுத்துகிறாள். எனவே ஆண் தான் ஈடுபடும் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டுகிறான். ஆண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றாலே அதற்குக் காரணம் பெண்கள் தான்.

இதைப் புரிந்து கொள்ளாத ஆண்கள் தான், தான் திறமைசாலி என்றும் தன்னுடைய ஆற்றலினால் தான் எல்லாவற்றையும் செய்துவிட்டதாக பெருமை பேசிக் கொள்கிறார்கள். மனைவியைப் மதிப்பதே இல்லை. ஆனால் மனைவியைப் பிரிந்து வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு கஷ்டப்படும் பொழுது தான் அவர்களுக்கு இந்த உண்மை புரியும், பல குடும்பங்களில் ஒருவரிடம் உள்ள பிராணசக்தியை இன்னொருவர் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அவரிடம் பிராணசக்தி தீர்ந்துபோய் அவர் நோயாளி ஆனா பின் அவரை விட்டு விலகிச் சென்று விடுகின்றனர். கிடைக்கும் வரை இலாபம் என்று அவருடைய மொத்த பிராண சக்தியை உறிஞ்சி எடுத்துக் கொண்டு இறுதியில் நோயாளியான பின் சக்கையாக நினைத்து உதறித் தள்ளிவிட்டு சென்றால் அவர்களுடைய நிலை என்னவாகும்?

கணவன், மனைவி இருவரில் யாருக்கு நோய் வந்தது என்றாலும் பாதிக்கப்பட்டவரை கைவிட்டுவிடாமல் இருவரும் சேர்ந்து நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். பிராணசக்தி இழந்து விட்டவருக்கு இருப்பவர் அளித்து உதவி செய்ய வேண்டும். எனவே உயிர்சக்தியை இருவரும் அதிகரிப்பதற்கான வழியில் இருவரும் ஈடுபட வேண்டும்.