Home ஜல்சா ஒரு துரோக பொண்டாட்டிக்கு, ஊரே சேர்ந்து கொடுத்த விருந்து

ஒரு துரோக பொண்டாட்டிக்கு, ஊரே சேர்ந்து கொடுத்த விருந்து

62

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராமன் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
ராமனுக்கும், ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமனின் வருமானம் குடும்பத்திற்கு போதாத காரணத்தால் ராதிகா கட்டிட வேலைக்கு சென்றிருக்கிறார்.

ராதிகா 2 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பரமசிவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மேஸ்திரியிடம் சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி மேஸ்திரி பரமசிவனும், ராதிகாவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் விஷயம், மேஸ்திரியிடம் வேலை பார்க்கும் மற்ற வேலையாட்களுக்கு அரசல் புரசலாக தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து ராதிகாவின் கணவர் ராமனுக்கு தெரியவர ராதிகாவை கண்டித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

அதன்பிறகும் மேஸ்திரி பரமசிவன் உடனான ராதிகாவின் தொடர்பு நீடித்துள்ளது. தங்களது கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்துவிட்டது என்றும் பரமசிவனிடம் ராதிகா கூறியிருக்கிறார்.
இருவரும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராமனை இரவு 10.30 மணியளவில், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
அப்போது ராமன் அலறி சத்தம் போட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ராமன் வீட்டிற்கு ஓடிவந்திருக்கிறார்கள். உடனே அங்கிருந்து தப்பி ஓடிய பரமசிவனும், ராதிகாவும் பக்கத்து வீட்டில் நுழைந்தனர்.

அதனை கண்டுபிடித்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து இருவரையும் மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரார் சார்பில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் என்ன தற்போது அந்த கள்ள ஜோடிகள் ரெண்டு பேரும் கம்பிக்குப்பின்னால்..இருக்கிறார்கள். கணவனுக்கே துரோகம் செய்து அவரை கொலை செய்ய துணிந்த அந்த பெண்ணை ஊரே தூற்றுகிறது. ரிலீசானாலும் ஊருக்குள்ள போக முடியாது போலிருக்கே..? நல்ல தண்டனை.