Home உறவு-காதல் பொண்டாட்டி உங்க மேல இண்டரஸ்ட் இல்லாம இருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்..

பொண்டாட்டி உங்க மேல இண்டரஸ்ட் இல்லாம இருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்..

49

உங்கள் மனைவிக்கு உங்கள் மீதான அன்பு குறைந்துவிட்டது என்பதை குறிக்கும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன

உங்கள் மனைவியின் அன்பான பார்வையை மனதில் வைத்திருக்கிறீர்களா? உங்களது ஜோக்குகளுக்கு அவர் சிரிக்கும் போது, அவரது கண்களும் சிரிப்பதை உணர்ந்து இருக்கிறீர்களா? காலையில் நீங்கள் இருவரும் ஒன்றாக எழுந்திருக்கும் போது, அவருடைய உதடுகள் உங்களை கண்டு மலர்கிறதா?
ஆம் என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். கவலைப்பட தேவையில்லை. இல்லை என்றால் உங்கள் மனைவிக்கு உங்கள் மீது அன்பு இல்லை என்பதை இந்த சில அறிகுறிகளை வைத்து உறுதி செய்யலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் நுட்பமானவை மற்றும் அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை.

உங்களுடன் பேசுவதில்லை
தொடர்பு என்பது உறவின் ஒரு பகுதியாகும். ஒரு ஆரோக்கியமான உறவில் உள்ள ஜோடிகள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் உங்கள் துணையின் காதலை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் துணை உங்களிடன் பேசும் ஒரே விஷயம், குழந்தைகள் மற்றும் மளிகை கடை லிஸ்ட்டுகள் பற்றியதாக இருந்தால், இது உங்களது துணையை நீங்கள் கவரவில்லை என்பதற்கான அறிகுறியாகும். இது போன்ற சூழ்நிலையில் நீங்களாக உங்கள் மனைவியிடம் உங்களுக்கு அவர் மீது உள்ள காதலை தெரிவியுங்கள். ரொமேண்டிக்காக பேசுங்கள். நிச்சயம் உங்கள் மனைவி அதை ஏற்பார்.

எப்போதும் பிஸியாக இருப்பது
நல்ல காதல் ஜோடிகள், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தங்களது துணைக்காக நேரம் ஒதுக்குவார்கள். உங்களது மனைவி உங்களுடன் நேரம் செலவிடாமல், மற்ற பிற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால், அது உங்களுக்கு காட்டும் சிவப்பு விளக்கு ஆகும். அவரது மனதில் என்ன உள்ளது என்பதை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

தன்னை மட்டுமே கவனித்துகொள்வது
உங்களது மனைவி தன்னை மட்டுமே அதிகமாக கவனித்து கொள்கிறார் என தோன்றுகிறதா? உஷாராகுங்கள். காதல் ஜோடிகள் எப்போதும் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு மரியாதை இல்லையா?
உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு வருவது சாதாரணமான பிரச்சனை. ஆனால் ஒருவர் மீது ஒருவர் மரியாதை இல்லாமல் இருப்பது மிகவும் தவறு. காதல் மரியாதையை அடிப்படையாக கொண்டது. அவர் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது, உங்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களை மோசமாக மாற்றுதல்
திருமணம் அனைவரையும் மாற்றக்கூடியது தான். திருமணத்திற்கு பிறகு இருவருமே சில விஷயங்களை செய்வதும், சில விஷயங்களை செய்யாமல் இருப்பதும் வழக்கமானது தான். இவை காதலினால் உண்டாகும் மாற்றங்கள்.
ஆனால் காதல் இல்லாமல் போகும் போது, உறவு வழுவிழந்து போகிறது. தீய பழக்கங்களுக்கு பழகுகிறீர்கள், உங்கள் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் மனைவி காரணமாக இருந்தால் அது உறவை நல்ல வழியில் கொண்டு செல்லாது.

அவரது திட்டங்களில் நீங்கள் இல்லை
நீங்கள் ஜோடியாக இருக்கலாம். அதற்காக எல்லா இடங்களுக்கும் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும். அவரது எல்லா திட்டங்களிலும் உங்களுக்கு இடம் வேண்டும் என்பது சாத்தியமற்றது. ஆனால் உங்களது மனைவியின் எந்த திட்டங்களிலும் நீங்கள் இடம்பெறவில்லை என்றால் அது கவலைக்குறிய விஷயம் தான்.

உங்களை பற்றி கவலை இல்லை
ஒரு காதல் ஜோடியாக பார்க்கும் போது நீங்கள் இருவரும் ஒன்று தான். ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வது மற்றும் சார்ந்திருப்பது மிகவும் அவசியம். உங்களையோ உங்கள் உடைமைகளையோ உங்கள் மனைவி புறக்கணித்தால் காதல் இல்லை என்று அர்த்தம்.

புறக்கணித்தல்
ஒருவர் உங்களை காதலித்தால், அவர் கண்டிப்பாக உங்களது உறவினர்களையும் உங்களது நெருங்கிய நண்பர்களையும் சேர்த்து காதலிப்பார். அவர்களது காதலையும் சேர்த்து பெறுவார். ஒருவேளை உங்கள் உறவுகளை புறக்கணித்தால் அவருக்கு உங்கள் மீது உள்ள காதல் தொலைந்துவிட்டது என்று அர்த்தம்.

உங்களை விட மற்றவர்களை நேசித்தல்
ஒரு கணவராக நீங்கள் உங்கள் மனைவியின் அக்கறையையும் கவனிப்பையும் பெற கடமைபட்டு இருக்கிறீர்கள். ஒருவேளை அவர் உங்களை விட மற்றவர்களை அதிகமாக கவனிப்பது மற்றும் அக்கறை செலுத்தினால், உங்கள் மனைவிக்கு உங்கள் மீது விருப்பம் இல்லை என்று அர்த்தம்.

காதலை பரிசுகள் மூலம் மட்டும் வெளிப்படுத்துதல்
ஒரு சிறிய பரிசுகள் மற்றும் கிரிட்டிங் கார்டுகளை பிறந்தநாள் அல்லது திருமண நாட்களில் கொடுத்து, அதனும் அன்பையும் பாசத்தையும் வாரிவாரி கொடுப்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். ஆனால் கடமைக்கு ஒரு பெரிய பரிசையே கொடுத்தாலும், அது உங்கள் மீது காதல் இல்லை என்பதை குறிக்கும்.