Home பெண்கள் அழகு குறிப்பு பொடுகு தொல்லைக்கு உடனடி நிவாரணம் தரும் இயற்கை வழிகள்

பொடுகு தொல்லைக்கு உடனடி நிவாரணம் தரும் இயற்கை வழிகள்

42

பெரும்பாலானர்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகை ஆரம்பத்திலேயே கவனித்து போக்க முயற்சிக்காவிட்டால், பின் அதுவே தலைமுடியை அதிகம் உதிரச் செய்து, தலைமுடியை மெலியச் செய்யும்.

பொடுகைப் போக்க எத்தனையோ ஷாம்புக்களை மாற்றியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில சிகிச்சைகளைப் பின்பற்றினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி காட்டன் பயன்படுத்தி தடவி, 1 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2 வாரம் தொடர்ந்து பின்பற்றினால், பொடுகு முற்றிலும் போய்விடும்.

கற்றாழை ஜெல்லுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு விரைவில் நீங்கும்.

20 வேப்பிலையுடன், 10 புதினா இலைகளை எடுத்து, 4 கப் நீரில் போட்டு, பாதியாக நீர் குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி, அந்த இலைகளை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும்.

6 பூண்டு பற்களை எடுத்து அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

5 ஸ்பூன் புளித்த தயிரை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, நன்கு அரைமணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பின்பற்றினால், பொடுகு வேகமாய் போய்விடும்.