Home சமையல் குறிப்புகள் பிட்ஸா

பிட்ஸா

29

பிட்ஸா சாஸ் செய்வதற்கு

தக்காளி – 2

தக்காளி பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி

பார்மெஜான் சீஸ் – 2 மேசைக்கரண்டி

பேசில் – 1 தேக்கரண்டி

ஒரெகானோ – 1 தேக்கரண்டி

உள்ளி பேஸ்ட் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – சிறிது

உப்பு – சிறிது

ரொட்டி செய்வதற்கு:

ஆட்டா மா/கோதுமை மா – 3/4 கப்

ஓட்ஸ் மீல் – 1 கைப்பிடி

ஈஸ்ட் – 1/4 தேக்கரண்டி

சீனி – 1/4 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

உப்பு – சிறிது

பிட்ஸா மேலே சேர்ப்பதற்கு:

பிட்ஸா சாஸ் – 1/2 கப்

பார்மஜான்/மொட்சரில்லா சீஸ் – 1/4 கப்

நீளமாக வெட்டிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி

நீளமாக வெட்டிய பெல் பெப்பர் – 1 மேசைக்கரண்டி

வட்டமாக வெட்டிய தக்காளித் துண்டுகள் – 5 அல்லது 6

மிளகாய் ஃப்ளேக்ஸ் – ஒரு சிட்டிகை

காய்ந்த பேசில் – ஒரு சிட்டிகை

காய்ந்த ஒரெகானோ – ஒரு சிட்டிகை
தக்காளியை துண்டங்களாக நறுக்கிப் போட்டு, தண்ணீரில் அவித்து மசிக்கவும்.

பின்னர் அதனுள் ஏனைய பொருட்களைச் சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்ததும் நெருப்பை குறைத்து சிம்மில் 15 – 30 நிமிடங்களுக்கு விடவும். (மூட வேண்டாம் – கலவை சிறிது கெட்டியாவதற்கு).

இப்போது பிட்ஸா சாஸ் ரெடி. இதனை சிறிது ஆறவிட்டு பிட்ஸா ரொட்டியில் தடவி விரும்பிய toppings வைத்து பேக் செய்யலாம்.

மிதமான சுடு தண்ணீரில் ஈஸ்டைப் போட்டு சீனியையும் சேர்த்து கரைத்து 10 நிமிடங்கள் வைக்கவும். மாவினுள் உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இதனுள் ஈஸ்ட் கரைசலை சேர்த்து குழைக்கவும். இதனுடன் ஓட்ஸ் மீலையும் சேர்த்து சப்பாத்தி மாவிலும் சிறிது இளக்கமாக குழைக்கவும்.

ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மூடி 1 – 2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும்.

வெங்காயம், பெல் பெப்பரை வெறும் சட்டியில் போட்டு மெல்லிய நெருப்பில் வாட்டவும்.

ஒரு அலுமினியம் ஃபாயிலில் அல்லது மேசையில் மாவு தூவி அதன் மேல் மாவுருண்டையை வைத்து கைகளால் அல்லது உருட்டு கட்டையால் 12 – 13 அங்குல சப்பாத்தியாக தேய்த்து பிட்ஸா தட்டில் போட்டு மீண்டும் மூடி 1/2 மணித்தியாலங்கள் வைக்கவும்.

(அவனை 425 Fஇல் முற்சூடு பண்ணவும்.) பின்னர் தேய்த்த மாவின் மேல் பிட்ஸா சாஸை சீராக பரப்பவும்.

அதன் மேல் வாட்டிய வெங்காயம், தக்காளி, பெல் பெப்பரை தூவவும்.

பின்னர் அதன் மேல் சீஸை (பார்மஜான்/மொற்சரில்லா/இரண்டும்) தூவவும்.

முற்சூடு பண்ணிய அவனில் 15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை வைத்து எடுக்கவும். சுவையான பிட்ஸா தயார். மிளகாய் பிளேக்ஸ், பேசில், ஒரெகானோ தூவி சிறிது ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.