Home பெண்கள் தாய்மை நலம் குறைப்பிரசவத்திற்கு வழி வகுக்கும் தவறான காரணங்கள் இவை தானாம்…

குறைப்பிரசவத்திற்கு வழி வகுக்கும் தவறான காரணங்கள் இவை தானாம்…

39

தற்போது பல கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் நடைபெறுகிறது. குறைப்பிரசவம் குறிப்பிட்ட காரணிகளான வயது மற்றும் கருப்பை பிரச்சனைகளால் ஏற்படும். ஆனால் இன்னும் சில சமயங்களில் குறைப்பிரசவம் கர்ப்பிணிகளின் சில தவறான செயல்களால் ஏற்படும்.

இங்கு கர்ப்பணிகள் செய்யும் எந்த தவறுகள் குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது என்று தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வந்தால், குறைப்பிரசவம் நடைபெறுவதைத் தடுக்கலாம்.

கர்ப்பத்தின் இறுதி மாதத்தில் உடலுறவு

பிரசவ காலம் நெருங்கும் போது, கர்ப்பிணிகள் உடலுறவில் ஈடுபட்டால், அது குறைப்பிரசவத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, பிரசவத்தின் போது பெண்கள் பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிடும்.

மார்பக காம்புகளை தூண்டுதல்

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை அதிகம் தூண்டிவிடும் போது, உடலில் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு, கர்ப்பப்பையில் சுருக்கங்களை உண்டாக்கி, குறைப்பிரசவத்தை உண்டாக்கும் என மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடுமையான உடற்பயிற்சி

கர்ப்பிணிகள் பலர் சுகப்பிரசவம் எளிதாக நடைபெற வேண்டுமென்று தினமும் உடற்பயிற்சியை செய்வார்கள். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கர்ப்ப கால சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் கர்ப்பிணிகள் கடுமையாக உடற்பயிற்சியை செய்து வந்தால், அடிவயிற்றுப் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

பாத மசாஜ்
கர்ப்ப காலத்தில் பாத மசாஜ் மேற்கொள்ளக் கூடாது என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் அது கருப்பையை சுருங்கச் செய்யும். குறிப்பாக காலில் உள்ள இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்புடைய அக்குபிரஷர் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போழ, அது குறைப்பிரசவத்தை உண்டாக்கும்.

மோசமான வாய் சுகாதாரம்
ஆய்வு ஒன்றில் மோசமான வாய் சுகாதாரம் குறைப்பிரசவத்திற்கு வழிவகுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் பெண்கள் வாய் சுகாதாரத்தின் மீது சற்று அதிக அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக சொத்தைப் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, வாய்ப்புண் போன்றவை இருந்தால், உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.