Home குழந்தை நலம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எந்த விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்கிறார்கள்?.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எந்த விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்கிறார்கள்?.

35

அடம்பிடிக்கிற குழந்தைகளை சமாளிக்க தனி சாமர்த்தியம் வேண்டும். நினைத்ததை சாதிக்க வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளை அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக, பெற்றோர்கள் சில பொய்களை சொல்லி, அந்த சந்தர்ப்பத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது உண்டு. அப்படி என்னென்ன மாதிரியான பொய்களை பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்கிறார்கள்.

நிறைய ஸ்வீட் , சாக்லேட் சாப்பிட்டா ரத்தம் ஸ்வீட்டா மாறிடும்

குழந்தைகள் வித்தியாசமாக, முகங்களை வைத்திருந்தாலோ அல்லது முறைத்து பார்த்தாலோ, “ நீ இப்படி செஞ்சா உன் முகம் இதே மாதிரி மாறிப் போய்டும்” என சொல்வதுண்டு.

டீவி யை ரொம்ப பக்கத்தில போய் பார்த்தா சீக்கிரமா கண் தெரியாம போய்டும்.

உலகத்திலேயே நீ தான் ரொம்ப அழகான குழந்தை.

ரூமை விட்டு வெளியில வா, நான் உன்ன அடிக்க மாட்டேன்.

பெற்றோர்களுக்கு வெளியில் வேலை ஏதேனும் இருக்கும் சமயங்களில், “ போனதும் உடனே வந்துடறேன்” என்று சொல்வதுண்டு.

பழங்களை சாப்பிடும் போது, கொட்டையை முழுங்கிடக் கூடாது. அப்புறம் உன் வயித்துக்குள்ள மரம் முளைக்கும்.

பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளிடம், பால் குடிச்சா நல்ல உயரமா, ஸ்ட்ராங்கா வளருவ…

நிறைய காய்கறிகள் சாப்பிட்டா தான் சூப்பர் மேன் மாதிரி வர முடியும்.

நேரமாக படுத்து தூங்காம நடு ராத்திரி வரைக்கும் முளிச்சிருந்தா பேய் வந்து உன்ன முழுங்கிடும்.

இதுபோன்ற பொய்களையே பெற்றோர்கள் தங்கள் வாண்டுகளிடம் அடிக்கடி சொல்வதுண்டு.