லியூப்ரிகன்ட் என்பது எரிச்சல் அல்லது வலி உணர்வு உடலுறவின் போது ஏற்படாமல் இருக்க தான் பயன்படுத்துகின்றனர். மருந்தகங்கள் அல்லது கடைகளில் பல வகையான லியூப்ரிகன்ட்கள் விற்கப்படுகின்றன. சிலர் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களையும் லியூப்ரிகன்டாய் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த செயற்கை இயற்கை லியூப்ரிகன்ட்களை பயன்படுத்தும் போது அவை பற்றியும், அவற்றால் உண்டாகும் தாக்கங்கள் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்…
வலி! உடலுறவில் ஈடுபடும் போது வலி இல்லாமல் உணர வேண்டும் என்பதற்காக தான் லியூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான லியூப்ரிகன்ட்களில் Lidocaine மற்றும் Benzocaine என்ற மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை, வலி உணர்ச்சியை குறைக்க செய்பவை ஆகும். சில சமயங்களில் உடலுறவில் ஈடுபடுவது என்றில்லாமல், செயல்பாட்டின் போது பெண்களுக்கு கிழிசல் உண்டாகியும் வலி ஏற்படலாம். இது தெரியாமல் போனால், எளிதாக பால்வினை நோய் தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை! இது தான் என குறிப்பிட்டு கூற முடியாவிட்டாலும், பல லியூப்ரிகன்ட்களில் சேர்க்கப்படும் கலப்புகள் பெண்களிடம் தீய தாக்கத்தை உண்டாக்குகிறது. சர்க்கரை மூலம் தருவிக்கப்பட்டசேர்ப்புகள் லியூப்ரிகன்ட்களில் சேர்க்கப்படுவதால் ஈஸ்ட் தொற்று உண்டாக வாய்ப்பு உண்டு.
கருத்தரிக்கலாம்! லியூப்ரிகன்ட் பயன்பாட்டால் விந்து தரம் அல்லது கருப்பை வாய் அமில அளவில் தாக்கம் உண்டாக்காது. எனவே, லியூப்ரிகன்ட் பயன்பாட்டால் கருத்தரிப்பில் தாக்கம் உண்டாக வாய்ப்புகள் இல்லை.
உணர்ச்சி! சில வகை லியூப்ரிகன்ட்கள் வெப்பம், கூச்சம் சார்ந்த உணர்சிகளில் தாக்கம் உண்டாக்கலாம். இதனால் எரிச்சல் ஏற்படலாம். பெண்ணுறுப்பு இதழ் டெஸ்ட் செய்து அதனால் ஏதேனும் தாக்கங்கள் உண்டாகும் என தெரிந்தால் அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
இயற்கை பொருட்கள் நல்லது! தேங்காய் என்னை போன்ற இயற்கை பொருட்களை லியூப்ரிகன்டாய் பயன்படுத்துவது நல்லது. இவை எந்த தாக்கமும் உண்டாகாமல் பாதுகாக்கும்.
தவறல்ல! சிலர் லியூப்ரிகன்ட் பயன்படுத்துவதை தவறாக உணர்வார்கள். அல்லது அவரது துணை தவறாக எடுத்துக் கொள்வார்களோ என அச்சம் கொள்வார்கள். ஆனால், லியூப்ரிகன்ட் என்பது உடலுறவில் ஈடுபடும் போது வலி எரிச்சல் உண்டாகாமல் தடுக்க உதவுவது தான். லியூப்ரிகன்ட் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை