புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்ற சந்தேகம் மனதில் இருக்கும். பொதுவாக விந்து செல்கள் வெளிக்காற்று பட்டால் இறந்துவிடும். மிகவும் அரிதாகவே, விந்து செல்கள் பல மணிநேரம் உயிருடன் இருக்கும். உறவில் ஈடுபடும் போது பெண்ணின் உடலினுள் மில்லியன் கணக்கில் விந்து செல்கள் வெளியேற்றப்படும். ஆனால் அவற்றில் ஒரே ஒரு விந்து செல் தான் கருமுட்டை வரை நீந்தி சென்று, கருத்தரிக்க உதவும். அதில் மிகவும் ஆரோக்கியமான விந்து செல் தான் பல இடையூறுகளைத் தாண்டி கருமுட்டையை அடையும். இங்கு விந்து செல்கள் பெண்ணின் உடலினுள் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்பது குறித்து சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மை #1 விந்து செல்கள் சில மணிநேரங்கள் முதல் 7 நாட்கள் வரை பெண்ணின் உடலினுள் பல்வேறு காரணிகளைப் பொறுத்து உயிருடன் இருக்கும்
உண்மை #2 விந்து செல்கள் கருமுட்டையை அடைய முடியாமல் இறந்து போவதற்கு மற்றொரு காரணம், யோனியில் உள்ள அசிட்டிக் சூழ்நிலை தான். இருப்பினும் சில நேரங்களில் விந்து செல்கள் சுமார் 3 நாட்கள் வரையும் உயிருடன் இருக்கும்
உண்மை #3 விந்து வெளியேற்றத்துக்கு பின், மில்லியன் கணக்கிலான விந்து செல்களில் சிறிது தான் கருமுட்டை வரையே செல்லும். எஞ்சிய விந்து செல்கள் வழியிலேயே இறந்துவிடும்.
உண்மை #4 விந்து செல்கள் வெளியே எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்? வெப்பநிலை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து, சுமார் 20-60 நிமிடம் கூட உயிருடன் இருக்கும்.
உண்மை #5 விந்து செல்கள் உயிருடன் இருப்பதற்கான சூழ்நிலை இருந்தால், அது சுமார் 7 நாட்கள் வரை கூட உயிருடன் இருக்கும். அதிலும் ஓவுலேசன் காலமானது, விந்து செல்கள் நீண்ட நேரம் உயிருடன் இருப்பதற்கு சாதகமான சூழ்நிலையைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக விந்து செல்கள் கருமுட்டை வரை நீந்தி இணைந்து, எளிதில் கருத்தரிக்க உதவும்.
உண்மை #6 சில தம்பதிகள், உறவில் ஈடுபடும் போது காண்டம் போன்ற எதையும் பயன்படுத்தாமல், விந்து வெளியேற்றத்தின் போது வெளியே எடுத்துவிடுவார்கள். ஆனால் இம்மாதிரியான செயலாலும் கருத்தரிக்கக்கூடும் என்பதை மறவாதீர்கள்