பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்
பிறப்பு உறுப்பு
இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனப்பெருக்க உறுப்பு இது.
இதன் வெளிமடிப்புகள் தடித்த சதைப்பகுதிகளுடன் இருக்கும். கால்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போது இவை மூடிக்கொண்டு உள் பாகங்களைப் பாதுகாக்கிறது.
உள்மடிப்புகள் மிருதுவான தோல்பகுதியைக் கொண்டவை. இங்கு முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி ஏற்படும். உடலுறவின்போது இது விரிவடையும்.
ஹைமன் (Hymen)
பெண் உறுப்பின் திறப்பின் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப்பகுதி இது.
கடின வேலை, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின்போது இது விரிவடையும் அல்லது கிழிந்துபோகும்.
அப்போது லேசாக ரத்தம் வரும். முதன்முறை உடலுறவின்போதும் இது கிழிபடலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும்.
சில பெண்களுக்கு ஹைமன் இருக்காது. சிலருக்கு, எளிதாகக் கிழிக்க முடியாமல், மருத்துவரிடம் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை வரும்.
பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு ஹைமன் தானாகவே கிழிந்துபோவது உண்டு.
கிளைட்டோரிஸ்
மலர்மொட்டு போன்ற சிறு பாகம்.
பெண் உறுப்புகளில் மிகுந்த உணர்ச்சியைத் தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்குப் பாலியல் வேட்கை அதிகமாகி, உச்சகட்டத்தை விரைவில் அடைவாள்.
இதை பெண்ணின் வளராத ஆண் உறுப்பு என்று சொல்வார்கள்.
பெண்ணின் முக்கிய உள்பாகங்கள் சினைப்பை சினைப்பையில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை ஃபெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது.
இதோடு, ஆணின் விந்தணு இணையும்போது அது குழந்தையாக மாறுகிறது. ஒரு பெண்ணுக்கு, கருப்பையின் இருபுறமும் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் சினைப்பைகள் இருக்கும்.
ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப் பழ அளவில் இருக்கும்.
கர்ப்பப்பை வாய்
கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பை வாய் என சொல்வார்கள்.
கருப்பையின் இந்தத் திறப்பு, பிறப்பு உறுப்புக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு, கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறிய துவாரம் வழியே உள்ள நுழைகிறது.
அதேநேரத்தில், ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது.
குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.
ஃபெலோப்பியன் குழாய்கள், சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கின்றன. சினைப்பை, ஒரு முட்டையை வெளியிடும்போது, அந்த முட்டை இந்தக் குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.