Home பெண்கள் பெண்குறி பெண்களே! அந்த விஷயத்தில் கொஞ்சம் உஷார் ப்ளீஸ்

பெண்களே! அந்த விஷயத்தில் கொஞ்சம் உஷார் ப்ளீஸ்

52

மாதவிலக்கு காலங்களை அசுத்தம், தீட்டு என நினைத்துக் கொண்டு, வெளியில் சொல்லக் கூச்சப்படுகிறோம். நம்முடைய உடலை எப்போதையும் விட கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாலே, மாதவிலக்கு நாட்களைப் பற்றி எரிச்சலில் இருந்து எளிதாக வெளிவந்துவிட முடியும்.

மாதவிலக்கு நாட்களில் பயன்படுத்துகிற சானிடரி நாப்கின்கள் இப்போது பல விதங்களில் கிடைக்கின்றன. மென்ச்சுரல் கப், காட்டன் நாப்கின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

நாப்கின்களைத் தேர்ந்தெடுப்பது, பிறப்புறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது ஆகியவற்றை விட மிக முக்கியமான விஷயம் பயன்படுத்திய நாப்கின்களை அடிக்கடி மாற்ற வேண்டும. குறைந்தது ஒரு நாளைக் மூன்று முறையாவது நாப்கின்களை மாற்ற வேண்டியது மிக அவசியம்.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். மாதவிலக்கு சமயங்களில் சரியாக சுத்தமில்லாமல் இருந்தால் நோய் தொற்றுகள் உண்டாகும். பிறப்புறுப்பின் வழியாக ரத்தப்புாக்கு உண்டாவதால், துர்நாற்றம் உண்டாகும். அதனால் அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்து கொண்டிருப்பது நல்லது.

பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது, சோப்பை யன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். பிறப்புறுப்பில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். சோப்பைப் பயன்படுத்தும் போது, நல்ல பாக்டீரியாக்கள் இறந்து போகும். அதனால், வெறுமனே வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, பிறப்புறுப்பைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது , எப்போதுமே பின்புறமாக இருந்து தான் கழுவ வேண்டும். முன்புறமாக கழுவுதல் கூடாது.

அந்த நாட்களில் பிறப்புறுப்பு ரத்த போக்கின் காரணமாக ஈரமாகவே இருக்கும். அதனால் தொடைப்பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகம். அதனால், தண்ணீரில் சுத்தம் செய்த பின்பு, நல்ல காட்டன் துணி கொண்டு தொடைப்பகுதியை சுத்தம் செய்வது நல்லது.

அதிக அளவிலான ரத்தப்பாக்கு இருக்கும் பெண்கள் பலரும் செய்கிற புத்திசாலித்தனமான காரியம் என்ன தெரியுமா? இரண்டு நாப்கின்க ஒன்றாக வைப்பது அல்லது நாப்கினுடன் ஒரு துணியையும் சேர்த்து வைத்துக் கொள்வது. ஆனல் அது முற்றிலும் தவறான ஒன்று.

இரண்டு நாப்கின்கள் வைத்திருக்கும் போது, வெகுநேரம் அந்த வெளியேறிய ரத்தத்துடன் உங்கள் பிறப்புறுப்பு அழுத்தப்பட்டிருக்கும். அதனால் எரிச்சலும் நோய்த்தொற்றுக்களும் உண்டாகக்கூடும். அதனால் இதற்கு சிறந்த வழி அடிக்கடி நாப்கின்களை மாற்றுவது தான்.