கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை.
கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க வேண்டும்.
அதிலும் முக்கியமான கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும்.
பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் செயல்பாடு நடக்கிறது என இங்கு காணலாம்…
கரு உருவாதல்!
மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் (இரத்தப்போக்கு ஏற்படும் நாள்) சிலர் ஹார்மோன்கள் புதிய கருமுட்டைகளில் வளர்ச்சி உண்டாக்குவதற்காக இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இதனால் தான் கருப்பையின் அண்டகத்தில் புதிய கரு உருவாகும்.
கருப்பை தயார் ஆகும் நிலை!
கருமுட்டை வளர்ச்சி அடைய ஈஸ்ட்ரோஜன் (oestrogen) எனும் ஹார்மோன் வெளிப்படும். இயற்கையாக கருத்தரிக்க கருவும் விந்தும் இணைய வேண்டும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் தான் கருப்பை புறணி தூண்டப்படும். இது கருவில் பஞ்சு மெத்தை போன்ற ஒரு உருவாகி வளர உதவும்.
கரு முட்டை!
சில நாட்களில் கரு முட்டை வளர்ந்த வலிமை அடையும். பிறகு முட்டை வெளித்தள்ளப்படும்.
அண்டவிடுப்பு!
நுண்குழிழ் விரிசலுக்கு பிறகு கருப்பை விட்டு வெளிவந்த கரு, கருமுட்டை குழாய் வழியாக வெளிவரும். கருத்தரித்தல்! விந்து, முட்டையுடன் இணைய 12 – 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதன் பிறகு கருத்தரித்தல் உண்டாகிறது.