விறைப்பு ஏற்படுவதில்லை என்பது போன்ற பிரச்னைகள் ஆணுக்கு உண்டு. அதுபோல் பெண்களுக்கு ஏதாவது பிரச்னைகள் உண்டா? அவர்களும் வயாக்ரா பயன்படுத்தலாமா?
ஆணின் கலவி வீரியத்தை வெளிப்படுத்தும் அறிகுறி அவன் விரைப்புறுப்பின் நிமிர்வு. இதற்கு இணையான பெண்ணின் கலவி வீரிய வெளிப்பாடு அவள் ஜனனக் குழாயின் வழவழப்பு.
ஆணின் உடலமைப்பு அவனுக்கு ஆசை ஏற்பட்ட அடுத்த கணமே தசை நிமர்வை ஏற்படுத்துகிறது. ஆணின் ரியாக்ஷன் டைம் மிகத் துரிதமாக இருக்கிறது.
பெண்ணின் உடலமைப்பு கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. அவளுக்கு ஆசை ஏற்படவே ரொம்ப நேரமாகிறது. ஓர் ஆணைப் போல கவர்ச்சிக் காட்சிகளை வெறுமனே பார்த்தால் எல்லாம் அவளுக்கு ஆசை வந்துவிடுவதில்லை. அவள் பேச்சு, தொடுகை, அன்பின் வெளிப்பாடு ஆகியவற்றை அதிகமாக உணர்ந்தால்தான் ஆசை வயப்படுகிறாள். அவளுக்கு ஆசை உண்டான பிறகுதான் ஜனனக் குழாய் அகன்று வழவழப்பாகிறது.
ஆக பெண்ணின் ரியாக்ஷன் டைம் கொஞ்சம் தாமதமாக இருக்கிறது. பெண்ணின் வீரிய வெளிப்பாடான ஜனனக்குழாய் ஈரம் ஆணின் பேச்சாலும், ஸ்பரிசத்தாலும், அன்பினாலும் ஏற்படுகிறது என்பதால் வயாக்ரா மாதிரியான மாத்திரைகளால் பெண்களுக்கு பிரயோஜனம் இருப்பதில்லை.