கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம்.
இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியனுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்கள் தான்.
கீழ்க்கண்ட சூழல்களின் போது மட்டுமே மருத்துவர்கள் சிசேரியனுக்கு பரிந்துரைக்கிறார்கள்
தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற காரணங்களால் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.
நான்கு கிலோவிற்கு மேல் எடை உடைய குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்து வெளியேற முடிவதில்லை. குழந்தையின் மிருதுவான மண்டை ஓடு வெளியே வர முயற்சிக்கும் போது அழுத்தம் ஏற்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்படும் எனவே சிசேரியனுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
பனிகுடம் உடைந்து குழந்தை வெளியே வர முயற்சிக்கும் போது தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். அப்போது சிறுநீர்பை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவே சிசேரியனுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் ,
குறைப்பிரசம் காரணமாக….
தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்…
கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்…
இரட்டைக் குழந்தைகள் எனில்…
வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது…
30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது….