Home பெண்கள் அழகு குறிப்பு பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்

பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்

34

அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பேஷியல் என்பது உண்மையில் முகச்சருமங்களுக்கான சிகிச்சை முறை தான். முகச்சருமத்தினை சுத்தம் செய்வது, நீர்த்துவ தன்மையுடன் இருக்க செய்வது போன்ற பணிகள் இணைந்ததே பேஷியல். இந்த பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.

கோலகன் பேஷியல்:-

இது பலதரப்பட்ட பேஷியல் ஒன்றிணைந்தது. கிளினிங், லிம்போதிங் டிரைனேஜ் மசாஜ், ஹீட்டாங் மினரல், பாராப்பீன் மாஸ்க் மேல் கோலகன் ஷீட் மூடப்பட்டு செய்யப்படும் பேஷியல். அனைத்து சருமங்களுக்கு ஏற்ற பேஷியல்.

கோல்டு பேஷியல்:-

முகச்சருமத்தினை இளமை தன்மையுடன் போஷிக்க செய்ய 24 கேரட் தங்க பேஷியல் உதவுகிறது. செல்களை மறுஉருவாக்கம் செய்யவும், சருமத்தை பொலிவாக ஆக்கவும் இது உதவுகிறது.

அரோமா தெரபி பேஷியல்:-

சிறப்புமிகு நறுமண எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் பேஷியல். தோல் பகுதியில் சேர்ந்துள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி தோலின் இயற்கை பண்புகள் மேம்படுத்த செய்ய இந்த பேஷியல் உதவிபுரிகிறது.

முகப்பரு பேஷியல்:-

முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கானது. சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் முகப்பருக்கள் உள் செல்லுமாறு செய்யப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

பேசிக் கிளினிக்:-

இதில் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவது, அழுக்குகள், கருந்துகள்கள் போன்றவை அகற்ற உதவி புரியும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம்.