நீண்ட நாட்களாக கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? இருந்தாலும் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் உங்களின் கருவளத்தின் சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஒருவரது கருவளம் பாதிக்கப்படுவதற்கு அவர்களது பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
அதிலும் பெண்களின் கருவளம் வலிமையின்றி உள்ளது என்பதை ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஒரு பெண் சரியாக கவனித்து வந்தால், அவளது கருவளம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
குறைவான பி.எம்.ஐ உடலில் உள்ள ஹார்மோன்களின் சீரான இயக்கத்திற்கு, போதிய அளவிலான நல்ல கொழுப்புக்கள் அவசியம். அதாவது ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், இனப்பெருக்கத்திற்கு தேவையான ஹார்மோன்களின் இயக்கமின்றி, கருத்தரிக்க முடியாமல் போகும்.
தூக்கமின்மை தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், அது உடலில் லிப்டின் அளவைக் குறைத்து, மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். எப்படியெனில் லிப்டின் அளவு குறைவாக இருந்தால், பெண்ணின் கருமுட்டையின் தரம் பாதிக்கப்பட்டு, கருவுறுவதில் இடையூறு ஏற்படும்.
மது அருந்துதல் தினமும் மது அருந்தினால், கருவுறும் வாய்ப்பு குறையும். அது எந்த மதுவாக இருந்தாலும் சரி. குறிப்பாக பெண்கள் ரெட்ஒயின் ஆரோக்கியமானது என்று குடிப்பார்கள். அந்த ரெட் ஒயினை தினமும் குடித்தால், கருவளம் பாதிக்கப்படும். வேண்டுமானால், என்றாவது ஒருமுறை குடிக்கலாம்.
கடுமையான உடற்பயிற்சி ஆம், பெண்கள் மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்து வந்தால், அதனால் கருவளத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே எப்போதும் கடுமையாக உடற்பயிற்சி செய்யாமல், அளவாக உடற்பயிற்சியை செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குறைவான காலத்தில் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால் நல்லது. ஆனால் அதற்கும் குறைவான காலத்தில் மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் 28 நாட்கள் இடைவெளி இருக்கும் போது, கருமுட்டை நன்கு முதிர்ச்சி அடைந்து, விந்து கருமுட்டையுடன் இணையும். அதற்கு குறைவாக இருக்கும் போது, கருத்தரிக்கும் வாய்ப்பு 50 சதவீதமாக குறையும்.