Home பெண்கள் பெண்குறி பெண்களின் அந்தரங்க இடத்தில் வரும் புண், எரிச்சல், அரிப்பு போன்றவற்றிற்கான மருத்துவ ஆலோசனை..!.

பெண்களின் அந்தரங்க இடத்தில் வரும் புண், எரிச்சல், அரிப்பு போன்றவற்றிற்கான மருத்துவ ஆலோசனை..!.

34

பொதுவாக பெண்கள் அந்தரங்கம், பாலியல் பற்றி பேசுவதற்கு கூச்சப்படுவதுண்டு, ஆனால் இது சரியானதல்ல.

தங்களுக்கு இருக்கும் பிரச்சனை பற்றி அம்மாகளிடம், தோழிகளிடம் அல்லது தேவையிருப்பின் மருத்துவர்களிடம் பேசி சரிசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்களின் பிறப்புறுப்பில் புண் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன, ஏதேனும் சிறு பிரச்சனை இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பின் பயங்கர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அதிகமாக சோப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

அதிக வறட்சியும் புண்களை உண்டாக்கும், ஹார்மோன் மாற்றங்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளாலும் வறட்சி ஏற்படலாம்.

ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி அடைந்திருந்தால், அதன் காரணமாகவும் யோனியில் காயங்களையும், வலியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இதுதவிர பால்வினை நோய் இருந்தாலும் புண்கள் ஏற்படும், இதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.