ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் கடுப்பு ஏற்படுவது மிகவும் சாதாரண விடயம் ஆகும். தனக்குப் பிடிக்காதவற்றை யார் செய்தாலும் அதனை அனுபவிப்பவர் நிச்சயம் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார்.
பல முறை சாதாரண விடயங்களுக்கும் கடுப்பாகும் மனோபாவும் மனிதர்களுக்கான பண்பாக இருக்கின்றது. ஆனால் சாதாரண விடயம் மற்றும் அசாதாரண விடயம் எல்லாமே ஒருவரின் மனதை பொறுத்தது ஆகும். இது தெரியாமல் தான் பலமுறை பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆண்கள் தெரிந்தோ, தெரியாமலோ சிலவற்றை விளையாட்டாக செய்யப் போக, அது வினையாகி மனைவி மனம் வருந்தச் செய்கிறது. அவை என்னென்ன செயல்கள் என இங்குப் பார்ப்போம்..
கோபப்படும் பெண்களாகவே இருந்தாலும் பெண்களின் மனது குழந்தை போன்றது தான். தாங்கள் எதிர்பார்க்கும் எல்லா விடயங்களுக்கும் தன் கணவனிடம் இருந்து மறுப்பு மட்டும் தான் பதிலாக வருகிறது எனில் மிகுந்த வருத்தம் அடைவார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை அவர்களது உடை குறித்து எக்காரணம் கொண்டும் யாரும் கிண்டலடித்து விடக் கூடாது. அதற்காகத் தான் நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். கணவனாகிய நீங்கள் அவர்களின் உடையைப் பற்றி கலாய்த்தால் சண்டை வெடிக்கும்.
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வலி மற்றும் மூட் ஸ்விங் காரணத்தால் சோர்வாகவும், மனநிலை சீரற்றும் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களைச் சீண்டி பார்ப்பது, பழைய கதை பேசி நோகடிப்பது, கோபத்தைக் காட்டுவது என இருந்தால் நிமிடத்தில் அல்ல நொடியில் மூட் அவுட்டாகிவிடுவார்கள்.
உடலுறவில் ஈடுபடும் போது, எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் மனநிலை மற்றும் உடல்நிலைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டாம். இந்த விடயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது மூட் அவுட்டாக்குவது மட்டுமில்லாமல், உங்களையும் அவுட்டாக்கலாம்.
தன்னை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளாமல், எப்போதும் குற்றம், குறை கூறிக் கொண்டே இருந்தால் மனைவி மனதளவில் பெரிதாகப் பாதிக்கப்படுகிறாள்.