நீங்கள் லிப் பாம் பிரியராக இருக்கலாம், விற்பனைக்குக்
கிடைக்கும் பல்வேறு தயாரிப்புகளையும் பயன்படுத்திப் பார்த்தும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எதுவும் என்ற கவலையில் இருக்கலாம். நாங்கள் கூறுவது உங்களுக்குப் பொருந்துமென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான்! நீங்களே லிப் பாம் தயார் செய்துகொள்ளலாம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியல்லவா!
லிப் பாம் நாமே தயார் செய்வதா என்று உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பதை விட அது மிக எளிது! நீங்களே அவற்றைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டால் நீங்கள் இன்னும் புதுப்புது வகை லிப் பாம்களைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவீர்கள்! அதுமட்டுமின்றி, வீட்டிலேயே தயார் செய்யும் லிப் பாம்கள் இயற்கையானவை, எந்தத் தீங்கும் விளைவிக்காதவை. பெரும்பாலான வகை லிப் பாம்களைத் தயாரிக்க உங்களுக்குத் தேவையானவை, பீஸ்வேக்ஸ் பெல்லட்ஸ், ஸ்டோரேஜ் கண்டெய்னர்கள் மற்றும் எசன்ஷியல் ஆயில் ஆகியவையே.
வீட்டிலேயே நீங்கள் லிப் பாம்களைத் தயாரிக்க சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்:
விரைவாக, எளிதாகத் தயார் செய்யக்கூடிய லிப் பாம் (Quick and Easy Lip Balm)
உங்களுக்கு அதிக நேரமில்லை என்றால் அல்லது பலருக்கு அன்பளிப்பாக ஏதேனும் வழங்க வேண்டுமென்றால் இதனைத் தயாரித்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் (Ingredients):
பீஸ்வேக்ஸ் பெல்லட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன்
ஷீயா வெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் (ரோஸ், தாழம்பூ, பெப்பர்மின்ட் போன்றவை) – 10-12 சொட்டுகள்
செய்யும் முறை (Instructions):
ஒரு மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய கண்டெய்னர் அல்லது கிண்ணத்தில், ஷீயா வெண்ணெய், பீஸ்வேக்ஸ், எண்ணெய் ஆகியவற்றைப் போட்டு உருக்கிக்கொள்ளவும்.
30 வினாடிகள் இடைவெளி விட்டு விட்டு இப்படிச் செய்யவும் (மைக்ரோவேவ் பயன்படுத்தினால்). மீண்டும் தொடங்கும்போது நன்கு கலக்கிவிடவும்.
பிறகு எசன்ஷியல் ஆயிலை ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு அவற்றை சிறிய கலங்கள், கண்டெய்னர்கள் அல்லது டியூப்களில் சேகரிக்கவும்.
இவற்றைக் குளிரவிட்டு பிறகு பயன்படுத்தலாம்.
லெமனி லைம் லிப் பாம் (Lemony Lime Lip Balm)
லைம் எஷன்ஷியல் ஆயிளைச் சேர்த்தால், லிப் பாம் இன்னும் புத்துணர்வு அளிப்பதாகவும், சிறிது புளிப்பு நெடி கொண்டதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் (Ingredients):
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பீஸ்வேக்ஸ் – 2 டீஸ்பூன்
கொக்கோ வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 2 டீஸ்பூன்
லைம் எசன்ஷியல் ஆயில் – 10-12 சொட்டுகள்
செய்யும் முறை (Instructions):
தேங்காய் எண்ணெய், பீஸ்வேக்ஸ், கொக்கோ வெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒரு டபுள் பாய்லரில் மிதமான சூட்டில் வைத்திருக்கவும்.
எல்லாம் உருகும் வரை அவ்வப்போது கலக்கிவிடவும்.
பிறகு பேன் அல்லது பாய்லரை கீழிறக்கவும்.
லைம் எசன்ஷியல் ஆயிலை ஊற்றி நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஜார்களில் ஊற்றி, ஒரு மணி நேரம் வரை குளிரவிட்டு, பிறகு மூடியிட்டு மூடவும்.
குறிப்பு: டபுள் பாய்லர் இல்லையெனில், கொதிக்கும் நீரைக் கொண்டுள்ள ஒரு பேனில் சூடு தாங்கக்கூடிய கண்ணாடிக் கிண்ணத்தை வைத்துப் பயன்படுத்தவும்.
இலவங்கப்பட்டை பாம் (Cinnamon Balm)
இலவங்கப்பட்டை உதடுகளுக்கு வெப்பமளித்து பஞ்சுபோல் மென்மையாக வைத்துக்கொள்கிறது. இதன் மணமும் சுவையும் இதழ்களுக்கு புத்துணர்வை அளித்தபடி இருக்கும்!
தேவையான பொருட்கள் (Ingredients):
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
பீஸ்வேக்ஸ் பெல்லட்ஸ் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
வைட்டமின் E – 2-3 காப்ஸ்யூல்கள்
அசல் தேன் 3/4 டேபிள்ஸ்பூன்
இலவங்கப்பட்டை எசன்ஷியல் ஆயில் – 15 சொட்டு
செய்யும் முறை (Instructions):
ஒரு டபுள்பாய்லரில் தேங்காய் எண்ணெய் மற்றும் பீஸ்வேக்ஸ் இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
குறைந்த வெப்பத்திலேயே வைத்து, எல்லாம் உருகும்வரை அவற்றை கலக்கிக்கொண்டே வரவும்.
பிறகு வெப்பத்திலிருந்து கீழிறக்கிவிட்டு, வைட்டமின் E காப்ஸ்யூல்களில் உள்ள திரவங்களைச் சேர்க்கவும், அத்துடன் தேன் எசன்ஷியல் ஆயிலையும் சேர்க்கவும். பிறகு சிறிய கண்டெய்னர்களுக்கு மாற்றிக்கொள்ளவும்.
இது கெட்டியாக சுமார் 10 நிமிடமாகும்.
coconut oil
ரோஸ் அண்ட் கோக்கனட் லிப் பாம் (Rose and Coconut Lip Balm)
தேங்காய் எண்ணெய் உங்கள் உதடுகளை மென்மையாகவும் பஞ்சு போலவும் வைக்க உதவும், ரோஜா இதழ்கள் சுவையையும் நறுமணத்தையும் கூட்டும்.
தேவையான பொருட்கள் (Ingredients):
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பீஸ்வேக்ஸ் – 4 டேபிள்ஸ்பூன்
ஷீயா வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கோக்கனட் அல்லது வெனிலா எக்ஸ்ட்ராக்ட் – 1 டீஸ்பூன்
புத்தம்புதிய ரோஜா இதழ்கள் கால் கப்
இனிப்பு பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்யும் முறை (Instructions):
அனைத்து பொருட்களையும் ஒரு சாஸ்பேன் அல்லது மைக்ரோவேவில் சமைக்க ஏற்ற ஒரு கிண்ணத்தில் போட்டுக் கலக்கவும்.
அனைத்தும் முழுவதுமாக உருகும்வரை குறைந்த தீயில் சூடுபடுத்தவும் (அல்லது மைக்ரோவேவ் பயன்படுத்தினால், 30 வினாடி இடைவேளைகளில் சூடுபடுத்தவும்).
ரோஜா இதழ்களை எடுத்துவிடலாம் அல்லது அதிலேயே விடலாம் – பாம் கெட்டியானதும் பார்க்கவே அழகாக இருக்கும்!
கண்டெய்னர்களில் ஊற்றவும்.
முற்றிலும் குளிரும்வரை காத்திருக்கவும்.
மிண்டி டின்டெட் லிப் பாம் (Minty Tinted Lip Balm)
இது உதடுகளுக்கு நிறமும் அளிக்கும், ஈரப்பதமும் அளிக்கும். நீங்கள் விரும்பும் நிறத்தைப் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
தேவையான பொருட்கள் (Ingredients):
பீஸ்வேக்ஸ் பெல்லட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
பெப்பர்மின்ட் ஆயில் – 8 சொட்டு
கேரியர் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன் (ஆலிவ் / தேங்காய் / பாதாம் எண்ணெய்)
உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக்கில் இருந்து ஷேவ் செய்து எடுத்த துருவல்கள்
செய்யும் முறை (Instructions):
ஒரு கண்ணாடி ஜாரில் கேரியர் எண்ணெய் மற்றும் பீஸ்வேக்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மூடி வைக்கவும்.
நடுத்தரமான சூட்டில் வைக்கப்பட்ட, கொதிக்கும் நீருள்ள ஒரு ஜாரில், அந்த ஜாரை வைக்கவும். வேக்ஸ் உருகும் வரை காத்திருக்கவும்.
பிறகு ஜாரை எடுத்துவிட்டு நன்கு கலக்கவும்.
பெப்பர்மின்ட் ஆயிலைச் சேர்க்கவும். மின்ட் ஆயில் உதடுகளில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆகவே சரியாக 8 சொட்டு மட்டும் விடவும்.
நிறத்திற்கு, லிப்ஸ்டிக் துருவலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கலக்கிக்கொண்டே இருக்கவும். நீங்கள் விரும்பும் நிறம் வரும் வரை சேர்த்து, கலக்கவும்.
இந்தக் கலவையை கண்டெய்னர்களில் ஊற்றி, 2 – 3 மணிநேரம் குளிரவிடவும்.
இந்த லிப் பாம்கள் பாதுகாப்பானவை, பார்டி வேர் தயாரிப்புகளாகப் பயன்படும். நீங்களே தயாரித்து முயற்சித்துப் பாருங்கள்!