Home சூடான செய்திகள் இந்த விஷயங்கள தான் பொண்ணுங்க பசங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்களாம்…

இந்த விஷயங்கள தான் பொண்ணுங்க பசங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்களாம்…

25

எதிர்பார்ப்பு என்பது மனிதர்களின் இயல்பான குணாதிசயங்களில் ஒன்று. சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களைப் பொருத்து அதன் அளவு வேறுபடும். அதுபோல பொதுவாகவே ஆண்களிடம் பெண்களுக்கும் பெண்ணிடம் ஆணுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.

குறிப்பாக, பெண்களுக்கு ஆண்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவரவர் தேவைக்கேற்ப இருக்கும். அப்படி எல்லா பெண்களும் ஆண்களிடம் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்?

ஆண்கள் எப்போதும் எல்லா விஷயங்களிலும் அவசரப்படுவதுண்டு. அது தவறு. அதிலும் குறிப்பாக, தாங்கள் எங்கேயாவது வெளியே கிளம்பும்போது நிச்சயம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

கணவன், மனைவிக்குள் நன்றி என்பது இருக்கத் தேவையில்லை தான். ஆனால் ஒருவர் செய்யும் நல்ல விஷயத்தை மற்றொருவர் பாராட்டலாம். ஆனால் ஒருபோதும் ஆண்கள் இதைச் செய்வதே இல்லை.

சிடுசிடுப்புடன் இல்லாமல் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அறிவியல்பூர்வமாக எதையும் ஆராய்ந்து குறைகூறிக்கொண்டே இருக்காமல் சற்று நகைச்சுவை உணர்வுடன் சிரித்துப் பேச வேண்டும்.

ஆண்கள் என்றாலே வீரம், கம்பீரம் என்பதை எப்போதும் எல்லா நேரமும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்காமல் வீட்டில் உள்ள பெண்களிடம் சிறிது நேரம் செலவழித்து மென்மையாக மனதுக்கு இதமாகப் பேசிக் கொண்டிருக்கலாம்.

இல்லற வாழ்வில் எல்லா நேரத்திலும் கணவனை நூறு சதவீதம் புரிந்துகொண்டு நடக்க முடியாது. அதனால் ஆண்கள் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடனும் இருக்கலாம்.

உறவுகளில் எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் தாங்களாகவே முன்வந்து அன்பு, பரிசு, காதல், முத்தம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதில் ஆண்கள் கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.