Home உறவு-காதல் பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியலையா?… இந்த டிப்ஸ்லாம் மனசுல வச்சிக்கோங்க.

பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியலையா?… இந்த டிப்ஸ்லாம் மனசுல வச்சிக்கோங்க.

31

இந்த பொண்ணுங்க இருக்காங்களே அவங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா என்று புலம்பும் ஆண்களுக்கு இதோ ஒரு சின்ன யோசனை. பெண்களைப் புரிந்துகொள்வது மிக மிக எளிதான விஷயம் தான்.

ஆனால் பெண்களை மொத்தமாக ஆறே வகைகளுக்குள் அடக்கிவிடலாம். அவை என்னென்ன? என்பதைத் தெரிந்து கொண்டாலே மிக எளிதாக அவர்களை சமாளித்துவிடலாம்.

பல ஆண்கள் நினைக்கிறார்கள் புத்திசாலியாக இருக்கும் பெண்களை என்ன செய்தாலும் ஏமாற்ற முடியாது என்று. ஆனால் புத்திசாலியான பெண்களும் ஆண்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் தானே?…

பெண்களில் பல வகைகள் உண்டு தான். ஆனால் அத்தனை பேரும் இந்த ஆறு வகைக்குள் அடக்கம். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ஆள் எந்த டைப் என்று கவனித்து அதற்கேற்றபடி சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

1. சில பெண்கள் நீங்கள் ஏதாவது சின்னதாகக் கூட தவறு செய்யமாட்டீர்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காத்திருப்பார்கள். சின்னதா ஏதாவது தப்பு செய்தால் போதும், அதற்கு உங்கள் காதில் ரத்தம் வருமளவுக்கு பேசியே கொன்றுவீடுவார்கள்.

என்ன? உங்க ஆளு இந்த டைப் இல்ல தான? அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலி தான்.அப்படியே இருந்தாலும் நீங்கள் வெளியில் செல்லும் போது முடிந்தவரையிலும் உடன் அழைத்துச் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.

2. சில பெண்கள் தான் நினைப்பது மட்டும் தான் சரி என்கிற டைப். பெரும்பாலான நேரங்களில் தான் நினைப்பதை மட்டுமே தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் செய்ய வேண்டும், கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். எதாவது முக்கிய விஷயமென்றால் நீங்கள் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்க மட்டுமே செய்வார்கள்.

இந்த மாதிரி ஆட்கள் எப்போதுமே கோபமாக சிடுசிடுவென்றே இருப்பார்கள். இந்த கொடுமை தாங்க முடியாமல், அவர்கள் கையிலிருந்து விலகி எஸ்கேப் ஆவது போல் தெரிந்தால், அவர்களுடைய மிகப்பெரிய ஆயுதமாக கண்ணீரைப் பயன்படுத்துவார்கள். அழுதே எல்லா காரியத்தையும் சாதிக்க நினைப்பார்கள்.

3. பல பெண்கள் இந்த மூன்றாவது ரகம் தான். பொறாமை குணம் நிறைந்திருக்கும். எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவார்கள். இவர்கள் பாதுகாப்பில்லாதது போலவே எப்போதும் உணர்வதால் தான் இந்த பொறைாமை அதிகரிக்கிறது.

இவர்கள் எப்போதும் யாரையும் நம்புவதில்லை. ஸ்டோர், பீரோ சாவியை மறந்தும் கூட உங்களிடம் கொடுக்க மாட்டார்கள். உங்களுடைய அத்தனை பாஸ்வேர்டுகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அவ்வப்போது செக் செய்து கொள்வார்கள். ஆனாலும் ஒருபோதும் உங்களை நம்பமாட்டார்கள்.

4. இந்த நான்காம் வகைப் பெண்கள் எப்போதும் தான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பாவார்கள். அடுத்தவர்கள் சுதந்திரத்தில் தேவையில்லாமல் நுழைய மாட்டார்கள். ஆனால் அதேசமயம் உங்கள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள்.

தனக்கான தனி இடம் வேண்டுமென நினைப்பார்கள். இதை செய் இதை செய்யாதே என எப்போதும் அடுத்தவர்களை வற்புறுத்த மாட்டார்கள். அவர்களால் தனியே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் உங்களிடம் இருக்க ஆசைப்படுவார்கள். அதை நீங்கள் உங்களைச் சார்ந்து இருக்கிறார்கள் என நினைத்துவிடக் கூடாது.

5. இந்த வகைப் பெண்கள் காதலியாகவோ மனைவியாகவோ இருந்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆம். சில பெண்கள் நம்முடைய தாயைப் போலவே மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள்.

நீங்கள் எவ்வளவு பொறுப்பற்றவராக இருந்தாலும் தினமும் நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்குத் தேவையான கர்சீப், பர்ஸ், ஆடைகள் என அத்தனையையும் பொறுப்பாக எடுத்துக் கொடுத்து, உங்களை டென்ஷன் இல்லாமல் வெளியே கிளப்பிவிடுவார்கள்.

சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும் என அத்தனையும் செய்து தாயைப் போலவே அன்பாகப் பார்த்துக் கொள்வார்கள்.

6. இந்த ஆறாம் வகை கொஞ்சம் வித்தியாசமான, நம் எல்லோராலும் ரசிக்கப்படுகிற பெண்களாக இருப்பார்கள். மேல் சொன்ன எல்லா குணங்களும் சேர்ந்து ஒரே பெண்ணுக்குள் இருந்தால்? அது தான் இந்த வகை பெண்கள்.

உங்களிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். தேவைப்படும் போது கோபமும் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் சமைத்து அவர்கள் சாப்பிட நேர்ந்தால் அதை ரசிப்பார்கள்.

சில சமயங்களில் வேறு எந்த பெண்ணாவது உங்களிடம் நெருக்கமாகப் பழகினால் பொறாமை குணமும் இவர்களிடம் எட்டிப் பார்க்கும். ஆனால் அவர்கள் அன்பில் எப்போதும் குறைவிருக்காது.