ஆண்களிடம் ஒருசில கிறுக்குத்தனமான செயல்பாடுகள் இருக்கிறது. அதே போல பெண்கள் மத்தியிலும் ஒருசில விஷயங்களை நாம் காண முடியும். ஆண்களை க்ராஸ் செய்து பார்க்கும் போது பலமாக சிரிப்பது, ஆண்கள் அவர்களை பார்க்கும் போது முதல் பார்வையிலேயே பட்டென்று கழுத்து சுளுக்கிக் கொள்ளும் அளவிற்கு முகத்தை திருப்பி கொள்வது என இந்த பட்டியல் நீளும். இந்த பட்டியலில் ஒரு சில விஷயங்களை பெண்கள் ஏன் செய்கிறார்கள்? இவர்களுக்கு அப்படி என்ன ஆயிற்று? என பலத்த சந்தேகம் எழ வைக்கும். அதில் ஒருசில விஷயங்கள்.
ஓகே! பெண்கள் “இட்ஸ் ஃபைன்..” என்று கூறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மனதில் ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அலாரம். ஆனால், ஏன் பெண்கள் உடனே கோவத்தை ஆண்களை போல வெளிக்காட்டாமல், அடக்கி, அடக்கி வைத்து என்றோ ஒருநாள் அதைக் கொட்டி தீர்த்து குமுறுகிறார்கள்?
ஷூ! மாடர்ன் அல்லது ஃபேஷன் எல்லாம் ஒன்றும் இல்லை, தன் தோழி, பக்கத்து வீட்டு பெண், பஸ்ஸில் உடன் வரும் பெண், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் என யாராவது புதியதாக எதையாவது செய்தால் அதை வாங்க வேண்டும், அதை அப்படியே செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. எல்லாம் ஓகே ஆனால், அது உங்களுக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்தும் அவற்றை பின்பற்றுவது ஏன், இறுக்கமான அந்த ஜீனும், எப்போது விழுவோம் என தெரியாத ஷூ, செருப்பு வேண்டுமா என்ன?
பேக்! ஆண்களின் பர்ஸில், பழைய பஸ் டிக்கட் கிரெடிட்கார்டு, பணம், சில பில்கள் போன்றவை இருக்கும். ஆனால், பெண்களின் பர்ஸில் ஒரு மார்கெட்டே புதைந்திருக்கும். அத்தனையும் அவர்கள் தினமும் பயன்படுத்த போவதில்லை. ஆனால், பிறகு அதை மொத்தமாக எடுத்து செல்ல வேண்டும்?
பாத்ரூம்! ஆண்களும் கூட இதை செய்வதுண்டு. தனியாக பாத்ரூம் செல்ல மாட்டார்கள். ஆனால், அதிக பட்சம் ஆண்கள் ஒரு தம் அடிக்கும் நேரம் அங்கு நேரம் செலவழிக்கலாம். ஆனால், பெண்கள் அங்கு தான் கண்ணாடி முன் நின்று செல்ஃபீ எடுப்பார்கள், அரட்டை அடிப்பார்கள், கிசு, கிசு பேசுவார்கள். அது என்ன பிக்னிக் பார்க்கா?
சாக்லேட்! கோபமாக இருந்தாலும், அழுதாலும், சிரித்தாலும், எதுவாக இருப்பினும் ஒரு சாக்லேட் பெண்களை மாற்றிவிடுகிறது. அது எப்படி? மிட்டாய், கேக், ஐஸ்க்ரீம் என அனைத்திலும் பெண்களுக்கு ஃபெவரைட் சாக்லேட் ஃப்ளேவர் தான். அதில் அப்படி என்ன தான் இருக்கிறது?
கருத்து! பெண்களிடம் நீங்கள் கருத்து கேட்டு, அதற்கு அவர்கள் ஒரு பதில் கூறிவிட்டால் அதைத்தான் நீங்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் செம காண்டாகிவிடுவார்கள். ஒரு சட்டை வாங்குவதில் இருந்து வீட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் வரை அப்படி தான்.
உணவு! ஆண்கள் பெரிதும் வீடு, ஹோட்டல் என பாரபட்சம் பார்த்து சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு பிடித்த உணவை, அவர்களது பசியை பொருது ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். ஆனால், பெண்கள் பொதுவாக அப்படி இல்லை. ஹோட்டலில் ஒரு மாதிரி, திருமண விழாக்கள் என்றால் ஒரு மாதிரி, வீடு என்றால் ஒரு மாதிரி. அதிகமாக உணவு சாப்பிடுவது ஒன்றும் கவுரவ குறைச்சல் இல்லையே? அல்ல தேசத்துரோக குற்றமா?. அதிலும் ஹோட்டல்களில் பக்கத்து / எதிர்த்த டேபிளில் யாராவது அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிட்டால் அருவருப்பான பார்வையில் பார்பார்கள். இதெல்லாம் ஏன்?
எண்ணங்கள்! பெண்கள் ஆண்களை கண்டதுமே அவர் யார், எப்படி பட்டவர் என டக்குன்னு அறியும் மைன்ட் ரீடிங் பவர் உள்ளது போல எண்ணிக் கொள்கின்றனர். (அதனால் தான் 80% பெண்கள் கல்லூரிகளில் முதல் காதலில் தவறான ஆணை செலக்ட் செய்கிறார்கள் போல.) இவர்கள் இப்படி இருப்பது மட்டும் இன்றி, ஆண்களும் இப்படி இருக்க வேண்டும். பார்த்தவுடனே ஒரு நபரை கணக்கிட்டு அவர் இப்படி தான் கூறிவிட வேண்டும் என எண்ணுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தானே?