Home ஜல்சா நான் 18 வயதாகியும் முத்தமிடாதது, உடலுறவு வைத்துக் கொள்ளாதது குற்றமா?

நான் 18 வயதாகியும் முத்தமிடாதது, உடலுறவு வைத்துக் கொள்ளாதது குற்றமா?

29

ஊர் பெயர் குறிப்பிடாத, பதின் வயதின் விளிம்பில் இருக்கும் பெண்ணின் கதை…

எதிர் பாலினத்தை சேர்ந்த யாரையும் முத்தமிடாமல் இருப்பது, கட்டி அணைக்காமல் இருப்பது போன்ற அச்சம் என்னை 12 வயதில் தொற்றிக் கொண்டது.

அப்போது நான் மிடில் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்றெல்லாம் நான் எண்ணியதுண்டு

ஹை-ஸ்கூல் பயணம்…
மெல்ல, மெல்ல இது தவறல்ல என தோன்றியது. என்னை நானே நேசிக்க துவங்கினேன். என் வாழ்க்கையில் நான் எதையும் மாற்றிக் கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். ஆரோக்கியமான பழக்கங்கள் பின்பற்றினேன். சுயமாக எனக்கென நிறைய விருப்பங்கள் அதிகரித்துக் கொண்டேன்.

என்னை சுற்றி…
என்னை சுற்றி பல காதல்கள், காதல் என்ற பெயரில் நிறைய கூடல்கள் நிறைந்திருந்தன. அவற்றில் இருந்து நான் ஒரு துளி கூட பாதிக்கப்படவில்லை. என் பயணம் இனிதே சென்றுக் கொண்டிருந்தது. ஆனால், நான் சீனியர் ஆனபோது தான் ஒரு குழப்பம் எற்பட்டது.

ஒரு சூழல்…
ஒரு நாள் சீனியர் வகுப்பில் பயின்றுக் கொண்டிருந்த போது, அனைவரும் அவர்களுடைய முதல் முத்த அனுபவத்தை பற்றி பேசி மகிழ்ந்துக் கொண்டிருந்தனர். நான் அதை பற்றி கவலைக் கொள்ளாமல் எனது வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். திடீரென அனைவரும் என் பக்கம் திரும்பினர்…

விசித்திர பார்வை…
நான், எனக்கு அப்படி ஒரு அனுபவம் இல்லை, நான் எனது எதிர் பாலின நபர் யாரையும் அப்படி ஒரு எண்ணத்தில் முத்தமிட்டது இல்லை என பதில் கூறி முடித்த மறு நொடியே, பலரும் நான் எதையோ என் வாழ்வில் பெரிதாக இழந்துவிட்டதை போல என் மீது ஒரு விசித்திர பார்வையை வீசினர். மற்றும் சிலர் நான் பொய் கூறுகிறேன் என கிண்டல் செய்து பேசினர்.

ஓரிரு வாராம்..
அந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு வாரங்கள் நான் சரியாக யாரிடமும் முகம் கொடுத்து பழகவில்லை. ஏனெனில், மற்றவர்கள் என்னை வினோதமாக பார்த்தனர். நானே மனதினுள் ஏதோ பெரிய தவறு தான் செய்துவிட்டோமோ என்ற எண்ணங்கள் வளர செய்துக் கொண்டேன்.

நம்பிக்கை இழந்தேன்!
12 வயதில் இருந்து நான் எனக்குள்ளே சிறுக, சிறுக வளர்த்த அந்த நம்பிக்கை மெல்ல, மெல்ல என்னிடம் இருந்து மறைய துவங்கின.என் தலை முழுக்க ஏதேதோ எண்ணங்கள். பிறகு தான், எனது உணர்ச்சிப்பூர்வமான தனித்துவமான வாழ்க்கை பாதையில் இருந்து நான் விலகியது தான் இதற்கு காரணம் என புரிந்துக் கொண்டேன். மீண்டும் என்னை நானே காதலிக்க விரும்பினேன்.

பாதையில் திருப்பம்!
ஏன்? 18 வயது வரை ஒரு பெண் எதிர் பாலின நபரை முத்தமிடாமல், கட்டி அணைக்காமல், செக்ஸில் ஈடுபடாமல் இருப்பது என்ன அவ்வளவு பெரிய தவறா? நான் எனது பாதையை விரும்புகிறேன். நான், நானாக இருக்க, வாழ விரும்புகிறேன். எனது பாதை தான் எனக்கு பிடித்திருக்கிறது.

ஒன்றும் செய்யாது…
நமது பாதையில் இருந்து நம்மை விலக செய்து, நமது பயணத்தை சீர்குலைக்க அடிதடி, வன்முறை, எதிர்மறை செயல்களில் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை. ஒரு சிறு பார்வையில் நமது நம்பிக்கையை இந்த சமூகம் திசை மாற்றி விடும். எந்த காரணமும் கொண்டு உங்கள் பாதையில் இருந்து விலகி விடாதீர்கள். உங்கள் வெற்றி, உங்கள் வாழ்க்கை, உங்கள் மகிழ்ச்சி அனைத்தும் உங்களை சார்ந்ததாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரோ சிரிப்பார், யாரோ முறைப்பார் என உங்கள் சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள். இது அனைவருக்கும் பொருந்தும்!